‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி

கர்ணன்,நெல்லையப்பர் கோயில்

வெண்முரசின் அடுத்த நாவலை இன்னமும் எழுதத் தொடங்கவில்லை. பல அலைச்சல்கள். நடுவே பல கருத்துப்பூசல்கள். தொடர்பில்லாத வாசிப்புகள். ஓரளவு உளம் அமைந்துள்ளது .விரைவில் தொடங்கிவிடுவேன் என நினைக்கிறேன். ஒரு சொல் தட்டுப்பட்டுள்ளது. இருட்கனி. அது கம்பன் ராமனைப் பாடும்போது அளித்த சொல். கருநிறத்தோன். வானிருள் கனிந்து உருக்கொண்டோன்.

இருட்கனியும் போல்பவன் கங்குலும் திங்களும்

தனியும் தானும் அத் தையலும் ஆயினான்

என்கிறான் கம்பன்

ஏப்ரல் 10 முதல் வெளியிடவேண்டும். அதற்குள் ஓரிரு பகுதிகளேனும் முன்னால் செல்லவேண்டும். இது பதினாறு பதினேழாம் நாள் போர் மட்டுமே. கர்ணனின் மறைவு வரை. அதற்கான வடிவம் ஒன்று தோன்றவேண்டும் என காத்திருக்கிறேன்

இமைக்கணம் நாவலின் சில பகுதிகளைச் செப்பனிட்டுத் தருகிறேன் என்று சொல்லி அதை முடிக்கமுடியவில்லை. ஆகவேதான் அது செம்பதிப்பாகவும் நூலாகவும் வருவது பிந்துகிறது. விரைவில் அதையும் முடிக்கவேண்டும்

ஜெ

***

முந்தைய கட்டுரைதிராவிட இயக்கம்- ராஜ் கௌதமன்
அடுத்த கட்டுரைஉலுத்தர்