வல்லினம் இமையம் சிறப்பிதழ்

iamai

வல்லினம் மார்ச் மாத இதழ் இமையம் சிறப்பிதழாக வெளிவந்திருக்கிறது. தமிழின் முதன்மைப் படைப்பாளிகளில் ஒருவர் இமையம். இமையத்தின் நாவல்களைப் பற்றி சுனீல் கிருஷ்ணனும் செல்லாத பணம் பற்றி கடலூர் சீனுவும் செடல் பற்றி சுரேஷ் பிரதீப்பும் ஆழமான கட்டுரைகளை எழுதியிருக்கிறார்கள்  ஆறுமுகம் பற்றிய ரெ.பாண்டியனின் கட்டுரை குறிப்பிடத்தக்கது. எங்கதே நாவலை ஆண்களின் உளவெளி என வகைப்படுத்தி அழகுநிலா எழுதிய கட்டுரை முக்கியமான ஒன்று

தமிழில் எப்போதுமே இலக்கிய ஆக்கங்களைப்பற்றி எழுத்தாளர்கள்தான் பொருட்படுத்தும்படியான கட்டுரைகளை எழுதியிருக்கிறார்கள்.  பிறருக்கு இன்னமும்கூட இலக்கியப்படைப்பை அணுகும் முறை தெரியவில்லை. தங்கள் தனிவழிகளை அவர்கள் கண்டடையவில்லை. அரசியல் அல்லது சமூகவியல் உருவாக்கி அளித்த பொதுவழிகளினூடாக படைப்பை அணுகி எந்த கூர்வாசகனும் பொருட்படுத்தாத கருத்துக்களைச் சொல்பவர்கள் இவர்கள்.ஆகவே இக்கட்டுரைகள் முக்கியமாகின்றன.

அத்துடன்  இவர்கள் அடுத்த தலைமுறை எழுத்தாளர்களும்கூட .அவ்வகையில் இமையத்தை காலம் எப்படி மதிப்பிடுகிறது என்பதையே இந்தs சிறப்பிதழ் காட்டுகிறது. ஆகவே இவ்விதழ் ஒரு முக்கியமான நிகழ்வு

விஷால்ராஜா தீக்கொன்றை என்ற நுட்பமான கதை ஒன்றை எழுதியிருக்கிறார்.GAO XINGJIAN  எழுதிய கதை ஒன்றை சீ.முத்துசாமி மொழியாக்கம் செய்திருக்கிறார்

வல்லினம் இமையம் சிறப்பிதழ்

முந்தைய கட்டுரைதீ – கடிதங்கள்
அடுத்த கட்டுரைஒரு குறுவரலாறு