வெள்ளையானை கடிதங்கள்

vellai

வெள்ளையானை வாங்க

வெள்ளை யானையை ஏன் எழுதவேண்டும்?

வெள்ளையானை ஒலிவடிவம்

அன்பின் ஜெ,

ரா.முரளி, சக்திவேல் ஆகியோரின் அண்மைக்கால கடிதங்கள் “வெள்ளையானை”யை மீண்டும் படிக்கும் ஆவலைத் தூண்டியது. தோதாக 1897-ஆம் ஆண்டு பிப்ரவரியில் 6-14 வரை இங்கு தங்கியிருந்ததை நினைவுகூரும் விதமாக “விவேகானந்தர் நவராத்திரி” ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படுகிறது.

அதை காரணமாக வைத்து -நிகழ்வுக்கு முந்தியோ, அல்லது எல்லோரும் போனபிறகு, கேட் சாத்தியபிறகு கண்ணகி சிலையை பார்த்தபடி சாலையிலுள்ள மின்கம்ப வெளிச்சத்தில், அலைபேசியின் டார்ச் லைட்டில் கொஞ்சம் கொஞ்சமாக அசைபோட்டுக்கொண்டு  இடையிடையில் சற்று நிறுத்தி முடிந்தவரை அந்த வேலைநிறுத்தம் நிகழ்ந்த காலகட்டத்துக்கு போய் வந்தபடியே படித்துமுடித்தேன்.

அந்த தொடர்சொற்ப்பொழிவு நாட்களின் இறுதி சொற்பொழிவின் தலைப்பு “சென்னையில் விவேகானந்தர்” என்கிற எப்பேர்ப்பட்ட தலைப்பு அது. “சென்னையின் சித்தர்கள்” என்று தரமணி ரோஜாமுத்தையா நூலகத்தில் சில மாதங்களுக்கு முன்னர் கரு.ஆறுமுகத்தமிழன் பேசினார். மஸ்தானப்பா, பட்டினத்தார், வள்ளலாரை குறித்து நிறைவான உரையாக இருந்தது. சுகிசிவத்தின் நேற்றிரவு பேச்சு வெகுஜனத்தன்மை கொண்டது.

இங்கு தென்னிந்தியாவில் கடந்த நாற்பதாண்டுகால தொடர்பில் கிருஷ்ணம்மாள் ஜெகன்னாதன், டாக்டர் ஜீவா, கொடிக்கால் செல்லப்பா ஆகியோரின் நட்பு கொண்டிருப்பவர். Friendly Water for the World அமைப்பின் டேவிட் ஆல்பர்ட் இனாமுல் ஹசனோடு திருவல்லிகேணி வைட் ஹவுஸ்  லாட்ஜில் காத்திருந்தார். வீரப்பிரகாசம் அவர்களுக்கு இன்று தாங்கள் எழுதிய அஞ்சலிக் குறிப்பை சுட்டிக்காட்டியபோது காந்தியவாதி மாணிக்கத்தை நினைவுகூர்ந்தார்.

சுவாமி விவேகானந்தர் அமெரிக்கா போகவும், உலக மதங்களின் மாநாட்டில் பேசவும் காரணமான சென்னைவாசி அளசிங்கப் பெருமாள் (1865 – 1909), ஏய்டன் பைர்ன்  பேருரு கொண்டு மனக்கண் முன்தோன்றினர். எனக்கென்னமோ உண்மையும், கற்பனையும் கலந்த மோனநிலையில், ஒரு கையில் பிரசாத உணவு, மறுகையில் “வெள்ளை யானை”. உறைந்துபோனது போல 1842-ன் அந்தக்கட்டடம் முன் காலப்பிரஞ்சையற்று மெரினாவில் நேற்றிரவு நெடுநேரம்  கழித்தேன்.

வடக்கு திசையில் கண்ணகி சிலையின் எதிர்புறம் பாரதிசாலையில் லேடி வெலிங்கடன் பள்ளிக்கூடம், விவேகானந்தா இல்லத்துக்கும் இடைப்பட்ட சுற்றுச்சுவரையொட்டி மெரினா கடற்கரைக்கு பயணிகளை கொண்டுவரக்கூடிய கார், பஸ்களின் டிரைவர்கள் சிறுநீர் கழித்து வைத்த அசுத்தம் அந்த பகுதி முழுக்க நாறடித்து கொண்டிருக்கிறது. விவேகானந்தர் இல்லம் சென்னையின் பெருமிதம். சிறிதும் பொறுப்பணர்வற்ற வெட்டவெளியில், பொதுவெளியில் காணக்கிடைக்கும் இந்த ஆண்குறிகள் அசூசையை தருகின்றன.

கொள்ளு நதீம்,

ஆம்பூர்.

அன்புள்ள ஜெ

நீண்ட இடைவேளைக்குப்பின் வெள்ளை யானை நாவலை வாசித்தேன். முன்னர் வாசிக்காத பல நுட்பங்களை இப்போதுதான் கண்டுபிடித்தேன். வெள்ளையானை பற்றிய எந்த கட்டுரைகளிலும் இவை இல்லை. ஏய்டனின் உள்ளம் கவர்ந்த கவிஞர்கள் இருவர். ஒருவர் லார்ட் பைரன். இன்னொருவர் ஷெல்லி. ஷெல்லியை வாசித்து இலட்சியவாதியாக ஆகும் ஏய்டன் பைரனிலிருந்து இன்னொரு ஆன்மிகத்தைச் சென்றடைவதே வெள்ளை யானை. அவன் அங்கே கண்டடைவது ஏசுவை. ஒரு ஊர்வலம் இறந்தவர்கள். அதில் அவன் காணும் காட்சிகள் எல்லாமே மிஸ்டிக்கானவை. அந்த உச்சகட்ட நிகழ்வை ஷெல்லி எழுதிய மெகாபர் என்னும் கவிதையுடன் இணைத்திருக்கும் விதமும் ஆழமானது. உச்சகட்டத்தில் ஏசுவின் குருதியை ஏய்டன் அருந்தி ஞானம் நோக்கிச் செல்கிறான். பலவகையிலும் திறந்துகொள்ளும் முக்கியமான நாவல்

டி.ஆர். கணேஷ்

வெள்ளையானையும் வே.அலெக்ஸும்

கைவிடப்பட்டவர்களின் கதை – வெள்ளை யானை

கொல்லும் வெள்ளை யானை

தடுமாறும் அறம்: வெள்ளை யானை

அதிகாரமெனும் நுண் தளை – வெள்ளை யானை

முந்தைய கட்டுரைகட்டண உரை, ஐயங்கள்
அடுத்த கட்டுரைமதப்பூசல்களின் எல்லை