சென்னை புத்தகக் கண்காட்சி 8-1-2009 முதல் பத்துநாட்கள் நடக்கவிருக்கிறது. நான் சென்னையில் இருந்து நேற்று கிளம்பி இன்று வந்து சேர்ந்தேன். ஆகவே புத்தகக் கண்காட்சிக்கு நான் வரப்போவதில்லை. பொதுவாக நான் எல்லா அவ்ருடமும் சென்னை புத்தக்கக் கண்காட்சிக்கு வருவதுண்டு . இவ்வருடம் சாத்தியபப்டவில்லை. என்பதில் சற்றே வருத்தம்தான்.
என்னுடைய ஐந்து நூல்கள் இவ்வருடம் வெளிவருகின்றன. உயிர்ம்மை பதிப்பக வெளியீடாக மூன்று நூல்கள்
1. நிதழல்- அனுபவக்குறிப்புகள். வாழ்க்கையனுபவங்களை சிறிய அனுபவக்கதைகளாகச் சொல்லும் கட்டுரைகளின் தொகுதி
2. தன்னுரை. என்னுடைய மேடை உரைகளின் தொகுப்பு
3. ஊமைச்செந்நாய்- சிறுகதைத்தொகுதி
எனி இண்டியன் பதிப்பக வெளியீடாக ஒரு நூல்
1. ஈழ இலக்கியம் – ஓர் விமரிசனப்பார்வை
திருவண்ணாமலை வம்சி புக்ஸ் ஒரு தொகுதியை வெளியிட்டிருக்கிறது. என் மகள் சைதன்யாவைப்பற்றி நான் எழுதிய நகைச்சுவைக்கட்டுரைகளின் தொகுதி
ஜெ.சைதன்யாவின் சிந்தனை மரபு
பார்க்க சிவகுமாரின் கட்டுரை