சூரிய வம்சம்

26-manushyaputhiran300

குறுஞ்செய்திகளில் கடலூர் சீனு சமகாலக் கவிதைகளை பகிர்ந்துகொண்டே இருப்பார். நேற்று அவர் அனுப்பிய செய்தி.மனுஷ்யபுத்திரனின் கவிதை

 

வரும்போது

சூரியனின் முதல் கிரணங்களில் ஒன்றாக

இந்த பூமிக்கு வந்தேன்

இப்போது என்னை 

சிகரெட் லைட்டரில் எரியும்

சிறு நெருப்பாக பயன்படுத்துகிறீர்கள்

 

இதைச் சொல்லும்போது

கண்ணீர் சிந்தவேண்டாம்

என்றுதான் நினைக்கிறேன்

ஆனாலும்

கண்ணீர் சிந்துகிறேன் 

 

மனுஷ்ய புத்திரன்

 

Dear j,

இவ்ளோ பூடகமான கவிதை எல்லாம் தி மு க தலைவருக்கு புரியுமா என்ன?

– கடலூர் சீனு

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-57
அடுத்த கட்டுரைபால் – கடிதங்கள்