நீர்க்கூடல்நகர் கடிதங்கள் 2

Day 7-120 B

நீர்க்கூடல்நகர் – 6

நீர்க்கூடல்நகர் – 5

நீர்க்கூடல்நகர் – 4

நீர்க்கூடல்நகர் – 3

நீர்க்கூடல்நகர் – 2

நீர்க்கூடல்நகர் – 1

அன்புள்ள ஐயா

நீர்க்கூடல் நகரம் – மிக எளிதான, ஆனால் அசலான , உடனே தொடர்புறுத்தும் மொழியாக்கம். தமிழுக்கு நீங்கள் அளித்துக் கொண்டிருக்கும் கொடையை உணர்ந்து கொள்ள உங்களுடன் ஓடி வந்து கொண்டிருக்கிறோம்.

ஏதோ  ஒரு பேச்சில் அல்லது எழுத்தில் மூன்று அறிவுத்தளங்களைக் குறிப்பிட்டீர்கள் . தகவலை தர்க்கமாக, பின்னர் தரிசனமாக மாற்றிக் கொள்வது பற்றி.  வாசிக்கும் எல்லாவற்றிலும்  இந்த மூன்று படிநிலைகளையும் அவதானிக்க வேண்டும் போல. ஒரே நேர்கோட்டில் இந்த பரிமாணம் கவனிக்கப்படலாம். அல்லது  வாசக உளநிலைக்கேற்ப வெவ்வேறு பேசுபொருள்களில் வெவ்வேறு படிநிலைகளாக நிகழலாம்.

ஒரு வேளை ஒரு வாசகர் இப்படி வகைப்படுத்தலாம்.  மூன்று நதிகள் சங்கத்தில் நிகழும் மாபெரும் பண்பாட்டு நிகழ்வை எள்ளி நகையாடும் நாகரிக ஊடக மாந்தர் என்னைப் பொருத்த அளவில் ஒரு தகவலாக மட்டுமே இருக்கலாம்.  பெரும் கூட்டம் வரும் இடத்தில் தூய்மையையும் சட்டம் ஒழுங்கையும் பேணும் நிர்வாக அமைப்பும் செயல்பாடுகளும் ஒரு தர்க்க ஒழுங்கின் படியில் இருந்து அணுகலாம்.

ஆனால் இந்த அரிய பயணக்கட்டுரையில் தரிசனமாக, உள்ளொளியை தூண்டுவதாக இருப்பது நாகா சாதுக்கள் பற்றிய அவதூற்றுப் புகையை விலக்கி உண்மைகளை விளக்கி அவர்களுடன் தங்கி , திசையையே ஆடையாகக் கொள்ளும் நிலையை அடையும்  வரை அவர்கள் எதிர்கொள்ளும் பக்குவப் படிகளை எடுத்துரைத்து, இறுதியில் தாங்கள் புகைக்கும் இலையைக்கூட பிறருக்கு அளிக்கும் உச்சத் துறவை உணரவைத்தது தான் . வானையே போர்வையாகக் கொண்ட அந்த இரவில் கங்கைக்கரையில் உறங்கியது அருமை.

துறவு மேற்கொள்பவர்கள் அடையும் மூன்று நிலைகள் – முதலில் மனச்சோர்வால் கொள்ளும் அமைதி, பிறகு உற்சாகத்தால் அடையும் எழுச்சியும் பேசிக்கொண்டே இருத்தலும் – கடைசியாக நிறைவடைவதால் கொள்ளும் அமைதி – வேறு எந்த ஆன்ம இலக்கியத்திலும் பகிரப்படாதவை என நினைக்கிறேன். துறந்து விட்டவர்கள் இதைப் பேசுவதில்லை. அங்கே போகாதவர்களுக்கு அது அப்பால் உள்ளது. போய்விட்டு வந்தவர்கள்  அபூர்வமானவர்கள். அரிய தகவல்களை அவர்களால் தரமுடியும்

பேசிக்கொண்டே இருந்த நாகர்கோயிலைச் சேர்ந்த நாகா ஆகிக்கொண்டிருக்கும் சாது மனதை என்னமோ செய்கிறார். ஒருவேளை இது புனைவாகி இருந்தால் ஆசிரியரின் ஆல்டர் ஈகோ என்று தோன்றியிருக்கும். உங்கள் பண்பாட்டு, பயணக் கட்டுரைகள் படிப்பவர்கள் ஒரு சுருள்வில் மெத்தையில் குதித்துக்கொண்டிருக்கும் குழந்தைகளைப்போல உணர்கிறார்கள் என நினைக்கிறேன். குதித்து எம்பி வானத்தில் பாய்ந்துவிட வேண்டும் என்ற விழைவுடன் தொடர்ந்து குதித்துக் கொண்டே இருப்போம்.

இந்தியாவின் பண்பாட்டு எழுச்சியை நிலைநிறுத்தும் செயல்பாடுகள் பற்றி நீங்கள் எழுதுவது உயர்ந்த தேச சேவை என நினைக்கிறேன். உங்கள் பயணத்தில் சிரித்து மகிழும் நண்பர் குழுவில் ஒரு நாள் இடம் பெறுவேன் என்ற நம்பிக்கையும் பிரார்த்தனையும் உள்ளது.

அன்புடன்

ஆர் ராகவேந்திரன்

Dear Jeyamohan

Great travelogue. The faces of the common villagers – your pictures bring their simplicity, devotion and contentment. I am happy that the Government has spent money to provide the sanitation facilities, maintained security and protection. Definitely, the villagers who come from all corners of India deserve this kind treatment.  You mentioned that everyone used the trash can and toilets.  Those wonderful people  will take back this civic sense to their villages. We have the opportunity to travel the World, attend conferences, and able to attend luxury yoga meet or forums. Why not these good souls from the villages of India too can enjoy a gathering with some benefits?

I still do not understand why some are averse to Kumbh Mela or any Mela that projects that continuity from the ancient past.  May be their expectation of unruliness was not there this time!

You have explained beautifully the significance of Kumbh Mela which from ancient times has provided a meeting place and a major spiritual forum for the Naga Sadhus and other divisions.

If God willing, I would like to visit Kumbh Mela for the first time in coming years just to feel blessed by looking at those wonderful people.

Thanks for your great unbiased narrative.

Warm regards

Sobana Iyengar

அன்புள்ள ஜெ

நீர்க்கூடல்நகர் என ஏன் பெயர் வைத்திருக்கிறீர்கள் என புரியவில்லை. நீர்க்கூடல் அருகே உருவான கும்பமேளா நகரைத்தான் அவ்வாறு சொல்லியிருக்கிறீர்கள் என புரிந்ததும்தான் அந்தப்பெயர் பொருத்தம் புரிந்தது

கும்பமேளா பற்றிய எதிர்மறைப் பிரச்சாரத்தைப்பற்றிச் சொன்னீர்கள். பொது இடத்தில் குறைந்த ஆடையுடன் பெண்கள் தோன்றுவது, முத்தமிடுவது ஆகியவற்றை தனிமனிதச் சுதந்திரம் என்றபேரில் ஆதரிப்பவர்கள்தான் ஒரு ஆற்றங்கரையில் சில சாமியார்கள் நிர்வாணமாக இருந்தால் அது ஆபாசம் என கூச்சலிடுகிறார்கள். நிர்வாண ஸ்பாக்களை கடற்கரை நிர்வாணக்குளியல்களை நாகரீகம் என நினைப்பவர்கள் நாகா சாதுக்களை அவமதிக்கிறார்கள். இந்த முரண்பாட்டைப்பற்றியெல்லாம் இவர்கள் எண்ணிப்பார்ப்பதே இல்லை

மகாதேவன்

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-58
அடுத்த கட்டுரைலக்‌ஷ்மி சந்த் ஜெயின் – அறியப்படாத காந்தியர்- பாலா