உரையாடும் காந்தி – உரையாடல், சென்னை

gan

வணக்கம்,

காந்தி கல்வி நிலையத்தின் புதன் வாசகர் வட்டத்தில் 30.01.2019 அன்று (மாலை 6.45-7.45), நெய்வேலி பாலு அவர்கள் 

உரையாடும் காந்திஎன்ற ஜெயமோகன் அவர்களின் நூலை அறிமுகம் செய்து பேசுகிறார்.

 

இடம்:

காந்தி கல்வி நிலையம், தக்கர் பாபா வித்யாலயா வளாகம்,

58 வெங்கட் நாராயணா சாலை, தி.நகர், சென்னை – 600017

தொடர்புக்கு:  9790740886 (ம) 9952952686

மாலை 6.45-7.45

அனைவரும் வருக!!

பேச்சாளர் பற்றி:

நெய்வேலி பாலு அவர்கள், நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷனில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். தொழிற்சங்கவாதி, அரசியல் விமர்சகர், தமிழ் உணர்வாளர் என பன்முகம் கொண்டவர். ஊடக உலகில் இன்றைய அரசியல் நிலவரங்கள் குறித்து தொடந்து தன்னுடைய கறாரான விமர்சனங்களை பதிவு செய்து வருபவர். சிறந்த வாசிப்பாளர் மற்றும் பேச்சாளர். எல்லாவற்றிற்கும் மேலாக, கடந்த பல வருடங்களாக நெய்வேலியில் வெற்றிகரமாக நடந்து வரும் புத்தகக் கண்காட்சியினை தொடங்கியவர்களில் ஒருவர். தற்போது, தழல் என்ற “Youtube” சேனல் ஒன்றை நடத்தி வருகிறார்.

நூல் பற்றி:

தன்னுடைய “இன்றைய காந்தி” நூலுக்குப் பின்னர் ஜெயமோகன் அவர்கள் காந்தி  குறித்து எழுதிய  புதிய கட்டுரைகள் மற்றும் காந்தியத் தகவல்களின்  தொகுப்பே இந்நூல். பல்வேறு தளங்களில் பலதரப்பட்டவர்களுடன் தொடர்ந்து உரையாடிக் கொண்டே இருந்தவர் காந்தியடிகள். அந்த உரையாடல்கள் வழியாக அவர் தொடர்ந்து கற்பித்தார், தானும் கற்றுக்கொள்ளவும் செய்தார். அப்படிப்பட்ட காந்தியடிகள் குறித்து மேலும்  உரையாடவும், குழப்பம் நீங்கி தெளிவடையவும் இந்நூல் நமக்கு உதவுக்கூடும். “குக்கூ” காட்டுப் பள்ளி என்னும் தன்னார்வ தொண்டு அமைப்பின் பதிப்பகமான “தன்னறம்” இந்நூலை வெளியிட்டுள்ளது.

ஆசிரியர் பற்றி:

இந்நூலின் ஆசியர் திரு.ஜெயமோகன் அவர்கள்  ரப்பர், காடு, விஷ்ணுபுரம், அறம் முதல் மகாபாரதம் குறித்த வெண்முரசுவரை பல முக்கியப் படைப்புகளை தமிழுக்கு தந்தவர், தமிழில் தொடர்ந்து தீவிர வாசிப்புப் பழக்கம் உள்ளவர்களுக்கு இவரைப் பற்றிய அறிமுகம் நிச்சயம் தேவையில்லை. இவரது “இன்றைய காந்தி” இதுவரை தமிழில் வெளிவந்த காந்தி குறித்த நூல்களில் மிக முக்கியமானது எனலாம். இன்றைய் காலத்தில் தமிழ்நாட்டில் காந்தி குறித்த வாசிப்பை இளைஞர்களிடையே அதிகரிக்க செய்ததில் “இன்றைய காந்தி” -க்கு அதிக பங்குண்டு.

புதன் வாசகர் வட்டம்

காந்தி கல்வி நிலையம்

தி.நகர். சென்னை-17.

முந்தைய கட்டுரைகல்பற்றா நாராயணன் – இன்னும் மூன்று கவிதைகள்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-37