கிண்டிலில்…

vish

வெண்முரசு கிண்டில் -சலுகை

விஷ்ணுபுரம் கிண்டிலில்…

அன்புள்ள ஜெயமோகன்,

நலம் விழைகிறேன்.

பணிச்சூழலால் டாலஸ் வந்து 2 ஆண்டுகளாகிறது – வெண்முரசு செம்பதிப்புகள்  இந்தியாவில் இருக்க  இங்கே கிண்டிலில்  தான் வாசிக்கிறேன். இப்போது கிராதத்தில் இருக்கிறேன்.

வந்த புதிதில் வாங்கிய வேறு சில கிண்டில் நூல்களின் எழுத்துப்பிழைகளும் திடீரென நடுநடுவில் தோன்றும் சித்திர எழுத்துக்களும் தந்த அச்சத்துடனும் தயக்கத்துடனும் தான் வெண்முரசு நூல்களை வாங்கினேன். தரமான தயாரிப்பு – ஈடுபட்ட எல்லோரும்  பாராட்டுக்குரியவர்கள்.

இணையத்தில் வாசிக்கலாமெனினும் கிண்டிலின் வசதிகள் பழக்கமாகிவிட்டதால் இக்கேள்வி.

வெண்முரசின்  மாமலருக்குப்பின் வந்த 6 நாவல்களும் கிண்டிலில் கிடைக்குமல்லவா?  இரண்டு மாதங்களாக புதிய புத்தகம் வரவில்லையாதலால் கேட்கிறேன்.

என்றென்றும் அன்புடன்,

மூர்த்தி

 

அன்புள்ள மூர்த்தி

வெண்முரசு நூல்களை என் சார்பாக வலையேற்றம் செய்வது கிழக்கு பதிப்பகம். கிண்டிலில் என்னென்ன நூல்கள் வந்துள்ளன என்று தெரியாது. அவர்கள் தொடர்ந்து வலையேற்றுவார்கள் என நினைக்கிறேன்

 

ஜெ


பயணம், கிண்டில்

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-40
அடுத்த கட்டுரைரயிலில் – ஒரு கட்டுரை