குகைக்குள்…

9

குகை [சிறுகதை]-1

குகை [சிறுகதை] -2

‘குகை’ [சிறுகதை]-3

‘குகை’ -சிறுகதை -4

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

குகைக்குள் பிரவேசித்து ஸ்தம்பித்து விட்டேன். காந்தி திரைப்படத்தில் ஒரு காட்சி. இந்தியாவை அதன்மண்ணை, மரபை, மக்களை புரிந்து கொள்ள காந்தி ரயிலில் பயணிப்பார். அவருடன் கஸ்தூரிபாய் மற்றும்ஆங்கிலேய நண்பர் சார்லஸ். ஜன்னல் வழியே காண்பவற்றை உள்வாங்கி காந்தி காகிதத்தில் எழுதுவார்.ரயில் தென்னிந்தியா முழுக்க செல்லும். டிக்கெட் வாங்க வசதியற்ற எளிமையான இந்திய மண்ணின்பூர்வகுடிகள் ரயில் மேல் அமர்ந்தபடி பயணிப்பர். அவர்கள் சார்லியை ரயிலுக்கு மேலே வா என்று அழைப்பர். சார்லியும் ஜன்னலில் கால் வைத்து எம்பி மேலே செல்ல முயற்சிக்க, வேண்டாமென கூவி கஸ்தூரிபாகால்களை பிடித்து கீழே இழுக்க, இந்தியர்கள் கைகளை பிடித்து மேலே இழுக்க, ஓடும் ரயிலில் சார்லிஅந்தரத்தில் தொங்குவார். கடைசியில் காந்தி அவரை விடுவித்து மேலே தூக்கி விடுவார். எதிரே ஒரு குகைவரும். ரயிலுக்குள் பயணித்தே பழகிய சார்லஸ் ரயிலுக்கு மேல் அமர்ந்தவுடன் எதிரே வரும் குகையைகண்டு ஆச்சர்யமாய் பார்த்திருக்க, இந்தியர்கள் அவரது தலையை குனிய வைத்து கவிழ்ந்து படுக்கசெய்வர்.கிட்டத்தட்ட ஒரு சரணாகதி. ரயில் இருண்ட குகைக்குள் செல்லும்.

தொலைதல் (1.0)

ஒரு குடும்பத்தின் பிதாவையோ அல்லது தேசத்தின் பிதாவையோ இழந்துவிட்டால், சரியானவழிகாட்டுதல்கள் இன்றி, அதன் குழந்தைகள் சற்று தடுமாறி தொலைந்துதான் போகின்றன. பல நாடுகளிடம்கையேந்தி நேரு உருவாக்கிய இந்திய தேசம் வறுமை, கல்வியறிவின்மை போன்ற உடனடி சிக்கல்களைதீர்ப்பதற்கு , மேற்கையும் கிழக்கையும் கலந்தடித்து ஒரு தற்காலிக கட்டுமானத்தை ஏற்று சில காலம்பயணித்தது. பிறகு சீனப்போரில் தோல்வி, ருஷ்யாவின் வீழ்ச்சி, ஜனத்தொகை பெருக்கம், வேலையில்லாதிண்டாட்டம் என சிக்கல்கள் அதிகமாக, நரசிம்ம ராவ் இந்தியாவின் கதவுகளை தாராளமயமாக திறந்துவைத்தார். பூர்வீக மண்ணை விற்று நகரங்களை நோக்கி நகர்தல், பெரிய வீடு வாங்குதல், புதுப்புது மொபைல்மாற்றுதல், கார் வாங்குதல், வாரயிறுதி கலாச்சாரம், என இந்தியர்களின் வாழ்க்கை விரிகிறது. டான்ஸ்இந்தியா டான்ஸ்.

டான்ஸ் இந்தியா, டான்ஸ்!

தொலைதல் (2.0)

பல நாடுகள் சென்று கையேந்தி இந்தியாவை செதுக்கும் வேலையை நரேந்திர மோடி அரசு மீண்டும்தொடங்கி வைக்க, இந்திய சமூகம் மீண்டும் மீண்டும் தொலைந்து போகிறதோ? ஓரின சேர்க்கை சரியாதவறா? லிவிங் டுகெதர் சரியா தவறா? # Me Too என்ன ஆகும் ? விக்டோரிய ஒழுக்கவியல்களுக்கு பழகியமனங்கள். கேள்விகள். தேடுதல்கள். குழப்பங்கள். நவீன குகைகள் டிஜிட்டல் குகைகளோ? Facebook , Whatsapp, Twitter என அனைத்திலும் வன்மங்கள். வசைகள். காழ்ப்புகள். கழுவி ஊற்றுதல் MEME போடுதல் என்றுகாலத்தை வீணடித்தல். ஊழல்கள் தொடர்கின்றன. காசு வாங்கிக்கொண்டு ஊடகங்கள் சமூகத்துக்குகாண்பிக்க விரும்புவது எதனை?

(தேடுதலும் கண்டடைதலும்)

குகை சிறுகதையில் குகை பலவித படிமங்களாய் விரிகிறது. ”பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார் இறைவன்அடிசேரா தார் ” என்கிறது குறள். பிறவியெடுத்தல், ”நான்” எனும் ஆணவமலம் கண் விழித்து சிசுவாகிகர்ப்பத்தில் வளர்ந்து, வெளியே வருதல். வளர்ந்த பின்பு இறைவனடி சேர்ந்துவிட்டால் சுபம். இந்தியமண்ணின் பூர்வ குடிகளுக்கு சரணடைதல் என்பது இயல்பாகவே வருகிறது. ஆனால் ”நான்” எனும்ஆணவமலத்தால் சரணடைய இயலாதவர்கள் மீண்டும் மீண்டும் பலப்பல கர்ப்பவாசல், பலப்பல குகைகள், என சுற்றியலைந்து தொலைகிறார்கள்

குகை என்பது காலமும் வெளியும் (Time and Space) எனும் நோக்கில், காலப்பயணம் போலிருக்கிறது. பத்தடிதோண்டினால் நூறு வருடம் பின்னோக்கி சென்று ஆங்கிலேயர்களை காணலாம். நூறடி தோண்டினால்ஆயிரம் வருடம் பின்னோக்கி சென்று ராஜ ராஜ சோழனிடம் கை குலுக்கலாம். இன்னும் தோண்டினால்புத்தனை கண்டு வழி கேட்கலாம். பல்லாயிரம் வருடங்கள் பின்னோக்கி செல்லவும் அல்லது முன்னோக்கிசெல்லவும், குகை ஒரு WormHole போல செயல்படுகிறது.

உங்களது இணையத்தளமே ஒரு குகைதான். கடப்பாரையுடன் நாங்கள் காத்திருக்க, நள்ளிரவில் பதிவுகள்வெளி வருகிறது. நுனிப்புல் மேய்வதென்றால் மேயலாம். வெண்முரசு எனும் ஆழ்கடலில் மூழ்கிமுத்தெடுக்கலாம். காடுகளில் குகைகளில் திரிந்த ஊமைச்செந்நாய் தெளிவானவன். தீர்க்கமாய் முடிவெடுத்தவன். ஆங்கிலேயனின் உயிரை காப்பாற்றி பிச்சையிடுவதாக கூறிவிட்டு இந்திய மண்ணில் பெருமையுடன்வீழ்ந்தவன். இந்தியாவை இருட்டினில் வெறும் ஒலிகளால் புரிந்து கொள்வது சிரமம். பாரதத்தை புரிந்து கொள்ள, இழந்தசிறப்புகளை மீட்டிட, அதன் எதிர்காலத்தை செதுக்கிட, இந்தியாவின் விஸ்வரூப வண்ணங்களை காண்பதற்குசார்லியை ரயிலுக்கு மேலே காந்தி தூக்கிவிட்டது போல், இன்று குகைக்குள் அலைந்து கொண்டிருக்கும்பலரை தூக்கி விட வழிகாட்டுதல், வெளிச்சம் தேவைப்படுகிறது.

தேடுதல் கண்டடைதல் பற்றி நீங்கள்ஏற்கனவே நிறைய எழுதிவிட்டீர்கள். தேடுதல் – கண்டடைதல் எனும் பயணத்தின் நடுவில் மேலும் இரண்டுபுள்ளிகள் வருகின்றன. ஒன்று தொலைதல். மற்றொன்று கண்டடைந்ததை சொல்லுதல். தொலைபவர்களாகநாங்கள் இருக்க, கண்டடைந்ததை சொல்பவராக நீங்கள் இருக்கிறீர்கள்.

நன்றி,

அன்புடன், ராஜா.

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-39
அடுத்த கட்டுரைஜார்ஜ் ஃபெர்னாண்டஸ்