நூல்கள் பற்றி – கடிதங்கள்

stephen_leacock

தார்டப்பாவில்

அன்புள்ள ஜெயமோகன் சார்,

“தார்டப்பாவில்” என்ற பகடி படித்தேன்.

‘நான் உயரமான அழகான இளைஞன். கட்டுக்கோப்பான திடமான உடலமைப்பு. சூரியனாலும் சந்திரனாலும் வெண்கலநிறம் அடைந்தவன். [நட்சத்திரங்களின் பாதிப்பால் ஆங்காங்கே செம்புநிறமான புள்ளிகளும் உள்ளன] என் முகத்தில் நேர்மை, புத்திசாலித்தனம், அசாதாரணமான அறிவுத்திறன் ஆகியவை கிறித்தவத்தன்மை எளிமை அடக்கம் ஆகியவற்றுடன் கலந்து தெரிந்ததன’ மேற்கண்டவை தெரிவது ஒரு தார்டப்பாவில்.

படித்து கொந்தளித்து சிரித்தேன்.  நம்மை நாமே பகடி செய்வதின் உண்மையும் பயமும் நம்மை எப்படியோ சுத்திகரிக்கிறது. சுயவிமர்சனத்தில் இருந்து தான் விவாதம் ஆரம்பிக்கிறது. விவாதத்தில் இருந்துதான் நாம் எங்கே இருக்கிறோம் என்பது தெரிய ஆரம்பிக்கிறது. நம்மை நமக்கு தெரியும்போது உலகின் கண்ணிகள்,வலைகள் தெரிய ஆரம்பிக்கிறது. பிறகு இறுக்கம் குறைகிறது. இந்த வாழ்வு குறித்து புரிய ஆரம்பிக்கிறது. நீருக்குள்ளிருக்கும் வலையில் துடித்துக்கொண்டே வாழ்வதின் அர்த்தம் புரிய ஆரம்பிக்கிறது.

ஸ்டீஃபன்ராஜ் குலசேகரன்

அன்புள்ள ஜெ

முன்பு உங்கள் இணையதளத்தில் ஏராளமான மேலைநாட்டு நூல்களைப் பற்றிய சிறுகுறிப்புகள் இருந்தன. அவை ஃபேஷனபிள் ரீடிங் ஆக இல்லாமல் இன்றைக்கு அதிகமும் பேசப்படாத பிரிட்டிஷ் அமெரிக்க எழுத்துக்களைப்பற்றியவை. அவை பெரிய அறிமுகங்களாக இருந்தன. அவை இப்போது வருவதில்லை. நீங்கள் வெண்முரசில் பிஸி ஆனபின்னர் நூல்களைப்பற்றி விரிவாக எழுதுவது குறைந்துவிட்டது என நினைக்கிறேன். மீண்டும் எழுதவேண்டும் என்பது என் விருப்பம்.

ஆனந்த்ராஜ்

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-23
அடுத்த கட்டுரைஇரண்டு – சத்யஜித் ரே