புத்தகக் கண்காட்சிப் பரிந்துரை

book

 

அன்புநிறை ஜெ,

வணக்கம், இந்த ஆண்டு புத்தக காட்சியில் கண்டிப்பாக வாசிக்க வேண்டிய புத்தகங்கள் மற்றும் இந்த ஆண்டு வெளிவந்த முக்கியமான புத்தகங்களை பரிந்துரைத்தால் மிக உதவிகரமாக இருக்கும். தொடர்ந்து தமிழ் இலக்கியத்தில் தீவிர வாசகராக, விமர்சகராக, எழுத்தாளராக இயங்கிவரும் தங்களின் பரிந்துரை மிக முக்கியமானதாகப்படுகிறது.

இந்த ஆண்டு வெளிவந்த புத்தகங்களில் கவனம் பெற்றவை, வாசகன் கண்டிப்பாக வாசிக்க வேண்டிய புத்தகங்கள் எவை என தாங்கள் தெரியப்படுத்த வேண்டும். தொடர்ந்து எனக்கு வரலாறு, பண்பாடு, தத்துவம் மற்றும் கட்டிடக்கலையில் ஈடுபாடு உள்ளது. இது சார்ந்து கண்டிப்பாக வாசிக்க வேண்டிய நூல் பட்டியலை தெரியப்படுத்தினால் மிகவும் உதவிகரமாக இருக்கும்.

அன்புடன்

ரா.பாலசுந்தர்

 

அன்புள்ள பாலசுந்தர்,

நான் புத்தகக் கண்காட்சிப் பரிந்துரைகளை பொதுவாக செய்வதில்லை. ஏனென்றால் என்னென்ன நூல்கள் வெளிவந்துள்ளன என ஒட்டுமொத்தமாக எனக்கு தெரியாது. எல்லாவற்றையும் நான் கருத்தில்கொண்டு கருத்துசொல்லவும் இயலாது.

ஆண்டு முழுக்க என் கவனத்திற்கு வந்த நல்ல நூல்களையும் ஆசிரியர்களையும் அறிமுகம் செய்துகொண்டேதான் இருக்கிறேன். அவற்றையே என் பரிந்துரைகளாகக் கருதலாம்.

நினைவில் இல்லை என்பவர்கள், தேடமுடியாது என்பவர்கள் வாசிக்கவும் போவதில்லை.

ஜெ

முந்தைய கட்டுரைபிரபஞ்சன் : கடிதங்கள்
அடுத்த கட்டுரைகாடு – மீண்டுமொரு வாசிப்பு