நிலத்தில் படகுகள்

images (4)

நிலத்தில் படகுகள் வாங்க

நண்பர்களுக்கு வணக்கம்,

சென்ற வருடம் (2017) சீ.முத்துசாமி அவர்களுக்கு விஷ்ணுபுரம் விருது வழங்கிய விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட  மேகாலயா எழுத்தாளர் ஜேனிஸ் பரியத் அவர்களுக்கு யுவபுரஸ்கார் பெற்றுத்தந்த ஆங்கிலச் சிறுகதை தொகுப்பான Boats on Land புத்தகம் நம்மால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு நிலத்தில் படகுகள் எனும் சிறுகதைத் தொகுப்பாக நற்றிணை பதிப்பகத்தின் மூலம் வெளிவந்திருக்கிறது. மொழிபெயர்ப்பாளர்களின் விவரங்கள்:

S.No English Tamil Translator
1 A Waterfall of Horses குதிரைகள் அருவி விஜயராகவன்
2 At Kut Madan குத்மதானில் வேணு தயாநிதி
3 Echo Words எதிரொலிச் சொற்கள் விஜயகிருஷ்ணன்
4 Dream of the Golden Mahseer தங்க மாஸீர் குறித்த கனவு சுசித்ரா
5 Secret Corridors இரகசியத் தாழ்வாரங்கள் கார்த்திக் வேலு
6 19/87 19/87 சுநீல் கிருஷ்ணன்
7 Laitlum லயத்லும் சிவாத்மா
8 Sky Graves ஆகாய சமாதிகள் சுரேஷ் பாபு
9 Pilgrimage யாத்திரை ராம்குமார்
10 Boats on Land நிலத்தில் படகுகள் விஷால்ராஜா
11 Embassy எம்பஸி சிறில் அலெக்ஸ்
12 The Discovery of Flight பறத்தலைக் கண்டடைதல் காளிப்ரஸாத்
13 Hong Kong ஹாங் காங் சிறில் அலெக்ஸ்
14 The Keeper of Souls ஆன்மாக்களின் காவலாளி சிறில் அலெக்ஸ்
15 An Aerial View ஒரு பறவைப் பார்வையில் சிறில் அலெக்ஸ்

முற்றிலும் புதிய நிலப்பகுதியை அறிமுகம் செய்தன இந்தக்கதைகள். பலர் மொழிபெயர்ப்பு செய்த இந்த மொத்தக்கதைகளையும், தமிழில்  வாசிக்கும்போது  ஒரே சீராக வரும்வகையில் மெய்ப்பு நோக்கி கொடுத்ததில் சுசீலாம்மாவின் பங்கு மிக முக்கியமானது. அவர்களுக்கு எங்கள் நன்றியையும் அன்பையும் உரித்தாக்குகிறோம். இதை துவக்கி வைத்த ராம்குமாருக்கும், ஜாஜாவுக்கும் உறுதுணையாய் இருந்த ஜெ. மற்றும் நற்றிணை பதிப்பகத்தாருக்கும் நன்றி.

 

இது பற்றிய குறிப்பு ஷில்லாங் டைம்ஸ் இதழில் வந்திருக்கிறது. அதற்கான இணைப்பு கீழே :-

தற்பொழுது இந்தப்புத்தகம் சென்னை புத்தகக் கண்காட்சியிலும் ஏனைய இணைய / நேரடி புத்தக நிலையங்களிலும் விற்பனைக்கு உள்ளது.   நண்பர்கள் வாசித்து தங்கள் விமர்சனங்களை அளிக்கவும்.

 

அன்புடன்,

R.காளிப்ரஸாத்

 

========================================================================================================

ஜேனிஸ் பரியத் உரை

==========================================================================================================

எதிரொலித்த சொற்கள்

ஜானிஸ் பரியத் – கோவை விவாதம்

இலக்கியத்தைக் கொண்டாடுதல்- விழா 2017

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-14
அடுத்த கட்டுரைபாட்டும் தொகையும் ஆவணப்படம் : கடிதங்கள்