ஈரட்டி – கடிதங்கள்

je

சிரிப்புடன் புத்தாண்டு

அன்புள்ள ஜெ

ஈரட்டியின் சிரிப்புக்கொண்டாட்டத்தை படங்களிலிருந்து பார்த்தேன். மகிழ்ச்சியில் நானும் கலந்துகொண்டதுபோல் உணர்ந்தேன். இப்படி கூடிக் கொண்டாட்டமாக இருப்பது கல்லூரி நாட்களுடன் முடிவுக்கு வருகிறது. அதன்பின்னரும் கூடுகைகள் உண்டு. பெரும்பாலும் தொழில்நிமித்தம். ஆகவே குடி உண்டு. குடி இருந்தாலே இரண்டு விஷயங்கள் நிகழும். ஒன்று அதீத ஜாக்ரதை வந்துவிடும். அதை மறைக்க செயற்கையான உற்சாகம். ஒருகட்டத்தில் என்ன நிகழ்கிறதென்றே தெரியாது

நீங்கள் சொல்வதுபோல என்ன நடக்கிறதென்றே தெரியாமல் மயங்கியிருப்பதை எப்படி கொண்டாட்டம் என்று சொல்லமுடியும் என்று எனக்கும் சந்தேகம்தான். விழிப்புநிலையில் நீடிக்கும் கொண்டாட்டம், நினைவில் நீடிப்பதுதான் சரியான கொண்டாட்டமாக இருக்கமுடியும்.

புத்தாண்டு வாழ்த்துக்கள்

எம்.சந்திரசேகர்

walk

அன்புள்ள ஜெ,

உங்கள் புத்தாண்டுக்கொண்டாட்டக் குறிப்பு அபாரம். அது வெறுமே ஒரு நிகழ்ச்சியாக இருக்காமல் வெவ்வேறு அவதானிப்புகள் வழியாகச் செல்கிறது. மகிழ்ச்சி நம் காலடி வரை வரும், ஆடைபற்றி அழைக்கும், நாம்தான் எடுத்து ஒக்கலில் வைத்துக்கொள்ளவேண்டும் என்ற நித்யசைதன்ய யதியின் வரி ஒரு பெரிய தரிசனம் போல் இருந்தது.

லௌகீகத்தில் இனிமையாக நீடிக்க அவ்வப்போது அதிலிருந்து விடுமுறை எடுத்துக்கொள்ளவேண்டும் என்பதும் ஓர் அற்புதமான கருத்து. அந்த இடம் பற்றிய வர்ணனைகள், நாய்களைப்பற்றிய குறிப்புகள் எல்லாமே ஒரு கனவு அனுபவத்தை அளித்தன

எஸ்.ராமச்சந்திரன்

era

அன்புள்ள ஜெ

ஈரட்டி கொண்டாட்டத்தின் பகுதியாக முன்னர் எழுதிய ஒரு குறிப்பை ஈரட்டி சந்திப்பு அளித்திருந்தீர்கள். அதில் இந்தியசிந்தனைமுறைகள் எப்படியெல்லாம் யானை என்னும் கருத்தை எதிர்கொள்ளும் என்பதை எழுதியிருந்த விதம் மிகுந்த குதூகலத்தை ஏற்படுத்தியது. நக்கல்தான் என்றாலும் அதன்பின்னாலுள்ள தெளிவான தத்துவப்புரிதல் ஆச்சரியத்துக்குரியது.

ஜெயப்பிரகாஷ்

ஈரட்டிச் சிரிப்பு…

ஈரட்டி சந்திப்பு

 

முந்தைய கட்டுரைமு.தளையசிங்கம் – ஒரு நினைவுக்குறிப்பு
அடுத்த கட்டுரைதன்மீட்சி