எனது வாழ்நாளில் நான் முதல்முதலில் இனம்கண்டு கொண்ட Activist மு.தளையசிங்கம். நான் ஒரு Activist ஆக வாழ்கின்றேனா இல்லையா என்பதை இன்னமும் என்னால் தீர்மானிக்க முடியாதிருந்த போதிலும் அவ்வாறு வாழத்தான் வேண்டும் என்ற ஆர்வத்தை எனக்குப் போதித்த குருவாக மு.தளையசிங்கத்தை குறிப்பிடுவேன்.
இலங்கையின் முதன்மையான படைப்பாளுமைகளில் ஒருவரும் சிந்தனையாளருமான மு.தளையசிங்கம் பற்றிய ஒரு நினைவுக்குறிப்பு. என் நண்பர் ஆஸ்திரேலியா முருகபூபதி எழுதியிருக்கிறார்.