பாட்டும் தொகையும் ஆவணப்படம் -கடிதங்கள்

 

விஷ்ணுபுரம் ஆவணப்படங்கள்

 

அன்புள்ள ஆசிரியருக்கு,

ஆவணப்படம் மிக அருமையாக இருந்தது. எப்போதும்போல தாங்கள் ஒன்று இரண்டு என்று அடுக்கி விழாவின் நாயகரைப்ப்ற்றி கூறியது தொகுத்துகொள்ள உதவி செய்தது.

ஆவணப்படத்தின் ஒட்டம் மிக லாவகமாக அவரின் மொத்த வாழ்க்கையயும் வரைந்து காட்டியுள்ளது. மிக முக்கியமாக அவரின் அனைத்து முகங்களையும் பதிவு செய்தவிதம் உண்மையில் அருமையாக இருந்தது. பார்த்து முடித்தவுடன் அவரை எங்கோ இருக்கும் ஒரு வனதேவன் என்ற நிலையில் இருந்து சலிப்பும், மகிழ்ச்சியும் இயல்பாக உள்ள ஒரு மனிதர் என்ற விதத்தில் காட்டியது அருமை.

எங்கும் இயக்குனர் வெளிதெரியாமல் நாம் சில நாட்கள் ஆசிரியருடனும் அவரின் தங்கை மற்றும் மனைவியுடனும் அவரின் வீட்டில் மற்றும் அவரின் ஊரில் இருந்துவிட்டு வந்த ஒரு அனுபவத்தைதான் அளித்தது.

ஆவணப்படம் முடிந்தவுடன் ஒரு விதமான வெறுமை வந்து சூழ்ந்து கொண்டது.

இயக்குனருக்கு மற்றும் இந்த ஆவணபடத்திற்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் நன்றிகள்
-திருமலை

 

kp

அன்புள்ள ஜெ

பாட்டும் தொகையும் ஆவணப்படம் மிக அருமையாக இருந்தது. பேராசிரியரின் உடல்மொழியும் அவருடைய எள்ளலும் சிரிப்பும் அவர் மனைவி நேர் மாறாக சீரியஸான ஆளுமையாக இருப்பதும் மிகச்சிறப்பாகப் பதிவாகியிருந்தது. நெல்லையில் இறங்கி அவருடைய வீட்டுக்குப்போவதுபோன்ற அமைப்பில் உருவாக்கப்பட்டிருந்தது ஆவணப்படம்.

பேராசிரியர் எள்ளலும் நக்கலுமாக பேசினாலும் அவருடைய ஆழத்திலிருந்து இன்னொருவர் எழுந்து வந்ததைக் கண்டது கடைசியில் அவர் இந்த காமிரா அவுட்டேட் ஆகவேண்டும். அதைப்போல எல்லாம் அவுட் டேட் ஆகவேண்டும் என்று சொல்லும் இடம். அவர் எழுந்துவந்து நம்மிடம் சொல்வதுபோலவே ஒலித்தது அது.

அருமையான ஒளிப்பதிவு. சிறந்த காட்சிக்கோணங்கள். தேர்ந்த சினிமாக்காரர் எடுத்த படம் என்பது நன்றாகவே தெரிந்தது

செல்வக்குமார்

 

முந்தைய கட்டுரைவிஷ்ணுபுரம் விழா:கடிதங்கள்-9
அடுத்த கட்டுரைவிஷ்ணுபுரம் விழா: இலக்கியமெனும் களிப்பு