ராஜாஜி, ஈவேரா-கடிதங்கள்

வணக்கம்.
ஐயா கோதண்டராமன் எழுதியிருப்பது மிக ஆழமாக சிந்திக்கவேண்டியது. அதுவும் இந்த காலத்தில் அரசு மானியத்தில் தனியார் நடத்தும் பள்ளிகளில் எந்த அளவுக்கு அநியாயங்கள் நடக்கிறது என்பதை நினைத்தால் கல்வி வியாபாரம் ஆவதை நினைத்தால் கொஞ்சம் கடினமாகத்தான் இருக்கிறது, எத்தனையோ பள்ளிகள் நல்லமுறையில் நடக்கலாம். நான் அவர்களை இதில் சேர்க்கவில்லை.

* ஆசிரியர் தேர்வு முறையில் பணம் கொடுத்தவர்களுக்குதான் முதலிடம். ஆசிரியரின் திறன் கொண்டு அவர்களை மதிபிடுவதில்லை. இதனால் மாணவர்களின் கல்விக்குத்தான் பங்கம் விளைவிக்கிறார்கள். இந்த ஆசிரியர்கள் வேலைக்கு லட்ச கணக்கில் லஞ்சம் நடமாடுகிறது.
* ஆசிரியரை நடுத்தும் முறையும் சில பள்ளிகளில் மிக கேவலமாக இருக்கிறது.
* சில பள்ளிகளில் மாணவர்கள் எப்படியாவது மதிப்பெண் வாங்கினால் போதும் என்று மாணவர்களை இயந்திரத்தைப் போல் நடத்துகிறார்கள்.
* அறிவுத்திறன் குறைவாக உள்ள மாணவர்களுக்கு இந்தப் பள்ளிகள் அவர்களை முன்னேற்றுவதில் மெனக்கடுவதில்லை.
* பள்ளிகளின் கட்டிடங்கள் மற்றும் பிற வசதிகளுக்காக பணம் செலவிடுவதில்லை.

லஞ்சம் இல்லாத ஊழல் இல்லாத துறையே இல்லை என்பதினால் பலருக்கு இதில் ஆச்சிரியம் இல்லாமல் இருக்கலாம். ஆனால் இந்தக் கல்வித் துறைதான் நாளைய இந்தியாவை நிர்ணயிக்க போகிறது அதை நினைத்தால் மனம் பட படக்கிறது,

ஜே, நீங்கள் சொல்லியிருப்பதில் எனக்கு உடன்பாடில்லை. கோதண்டராமன் பள்ளியில் மாதம் ரூ 61 கட்டாயமாக பிடித்தால் எந்த ஆசிரியர்க்குத்தான் மனசு வரும். மக்களுக்கு பிடிக்காததை சில சமயம் அரசு பண்ணவேண்டும் என்பதற்கு இது சிறந்த உதாரணமாகத் தெரியவில்லை. இந்த இடத்தில் அரசோ அல்லது அந்த பள்ளி நடத்தும் அந்த தனியார் நிறுவனமோ அந்த செலவை ஏற்கவேண்டும். இப்படி ஆசிரியிரிடம் கட்டாயபடுத்தி பணம் வாங்கி கொடுத்தால் ஆசிரியர்கள் நல்லவர்களாக இருப்பது கடினம். தங்களது கடமையை சரிவர செய்யமாட்டார்கள். விட்ட பணத்தை வேறு வழியில் சம்பாதிப்பதில்தில்தான் கவனம் கொள்வார்கள். இது இயற்கையான மனித குணம்தானே.

குறைகள் நிறைய தெரிகிறது இதற்க்கு என்ன செய்யவேண்டும் என்றுதான் தெரியவில்லை.

ராஜாஜி ஒரு கடிதம்

அருள்

ஈவேரா இன்றும் நிலைத்திருப்பதற்குக் காரணம் அவரது நோக்கம் தூய்மையாக இருந்ததே என நான் கருதுகிறேன். ஏனெனில், அவரது லட்சியங்களை அடைய அவர் செய்த செயல்கள் அத்தனை சரியானதாக இல்லை.

மற்றொரு கவனிக்க வேண்டிய செய்தி என்னவெனில், பிராமண எதிர்ப்பை மட்டும் பிரதானமாக எடுத்துக்கொண்டு முக்கியமான ‘சுயமரியாதை’யை அவரது அவரது அரசியல் வாரிசுகள் கைவிட்டுவிட்டார்கள். பிராமண/கடவுள் எதிர்ப்பே சுயமரியாதையென குறுக்கி மக்களையும் நம்பவைத்துவிட்டனர். உண்மையான சுயமரியாதை வளர்ந்திருந்தால், இலவச தொலைக்காட்சியையும் ஒரு ரூபாய் அரிசியையும் மற்றும் பல இலவசத் திட்ட்ங்களையும் ஏற்றுக்கொண்டிருப்பார்களா மக்கள்?

சாணக்கியன்

முந்தைய கட்டுரைநான்காவது கொலை!!! -7
அடுத்த கட்டுரைநான்காவது கொலை!!! -8