தமிழ் நவீனக் கவிதை படிமவியலில் [imagism] இருந்தே ஆரம்பித்தது. படிமங்களை உருவாக்குவதையே நெடுங்காலம் அது கவிதையின் அடிப்படைச் செயல்பாடாகக் கொண்டிருந்தது. ஒருவகையில் கவிதை என்பதே படிமங்களை உருவாக்கும் கலைதான்.
இரண்டு தலைமுறைக்கவிஞர்கள் அரிய படிமங்களை நம் மொழிக்கு அளித்துள்ளனர். ந.பிச்சமூர்த்தி முதல் பசுவய்யா வரை ஒரு தலைமுறை. தேவதச்சன் முதல் சுகுமாரன் வரை ஒரு தலைமுறை.ஆனால் தமிழ்நவீனக் கவிதையின் மூன்றாம் தலைமுறையினர் படிமங்களிலிருந்து அகலத் தொடங்கினர். நுண்சித்தரிப்புகள், மெல்லிய பகடிக்கூற்றுக்கள், நேரடியான உணர்ச்சிவெளிப்பாடுகள் ஆகியவற்றினூடாக கவிதை நிகழலாயிற்று
முந்தைய தலைமுறையிலேயே ஞானக்கூத்தன், பழமலை, சமயவேல் ஆகியோர் அத்தகைய கவிதைகளை எழுதியிருக்கிறார்கள். ஆனால் அவர்களிலிருந்து அடுத்த தலைமுறையினர் வேறுபடும் இடம் ஒன்றுண்டு. முந்தையவர்களுக்கு இருந்த கருத்துச்சார்பும் அதன் விளைவான சீண்டும்தன்மையும் அடுத்த தலைமுறையினரிடம் இல்லை. அவர்கள் பெரும்பாலும் .உளவிலக்கம் கொண்டு வாழ்க்கையை பார்ப்பவர்கள்.
அத்தகைய கவிஞர்நிரையில் இசை, இளங்கோ கிருஷ்ணன், லிபி ஆரண்யா , வெயில் என நீளும் பெயர்களில் சாம்ராஜுக்கும் இடம் உண்டு. நிறைய எழுதியவரல்ல என்றாலும் பல கூரிய கவிதைகளை அவர் எழுதியிருக்கிறார்
சாம்ராஜின் என்றுதானே சொன்னார்கள் பரவலாக பேசப்பட்ட ஒரு தொகுதி.
வடிவேலுவும் கருப்பசாமியின் அப்பாவும் – சாம்ராஜ்
=====================================================
விஷ்ணுபுரம் விழா விருந்தினர்-1 ஸ்டாலின் ராஜாங்கம்
விஷ்ணுபுரம் விழா விருந்தினர்-2 தேவிபாரதி
விஷ்ணுபுரம் விழா விருந்தினர்- 3 லீனா மணிமேகலை
விஷ்ணுபுரம் விருந்தினர் -4, எஸ் செந்தில்குமார்
விஷ்ணுபுரம் விருந்தினர் -5, சரவணன் சந்திரன்
விஷ்ணுபுரம் விருந்தினர் -6, சுனீல் கிருஷ்ணன்
விஷ்ணுபுரம் விழா விருந்தினர் -7, கலைச்செல்வி
விஷ்ணுபுரம் விழா விருந்தினர் -8, சி.சரவணக் கார்த்திகேயன்
விஷ்ணுபுரம் விழா விருந்தினர் -9, நரன்