பிரதமன் – கடிதங்கள் – 8

Ada-Pradhaman-

பிரதமன்[சிறுகதை]

அன்புள்ள ஜெ,

பிரதமன் வாசித்தேன்.

ஆசானின் வேலையாட்கள் தொழிலில் நுட்பமானவர்கள். கைத்திறன் மிக்கவர்கள். தேங்காயை தட்டி உடைப்பது ஒரு கணக்கு. காய்ந்த விறகுகளையும் பச்சை விறகுகளையும் கலந்து அடுக்குவது இன்னொன்று. சுண்ணாம்பு கலந்த வெள்ளத்தின் குணம் என பல நூறு கணக்குகள். வித்தைகள் இயங்குகின்றன.

ஆனால் கணக்குகள் வித்தைகளை மீறி கதையில் ஒன்று நிகழ்கிறது. [ஆசான் அந்தப்பெண் உறவு கூட கணக்குடன் மட்டும் முடிந்துவிட்ட ஓர் உறவு எனலாம்.]

சிம்பெனியை இயக்கும் மேஸ்ட்ரோ போல ஆசான் கடைசியில் கொண்டுவரும் மேஜிக். வெவ்வேறு சொற்களின் மூலம் அதைச் சுட்டலாம். ‘அவர் ஒரு ஞானி’. ‘தெய்வீகம்’. ‘Craft கும் கலைக்கும் உள்ள வித்தியாசம்’.

ஆனால் பிரதமனை யாராவது உண்மையில் categorize செய்ய முடியுமா?

அன்புடன்,
ராஜா.

பி.குநீங்களே பல இடங்களில் சொல்லி இருப்பீர்கள். நானே வந்து அடைந்ததால் எனக்கு முக்கியமாகிறது. மனிதன் இதுவரை கண்டறிந்த கற்பனை செய்யும் உச்சங்களின் விவரணை, எதிர்வினையை இலக்கியம் எனலாமா?

அன்புள்ள ஜெ

நலம்தானே?

பிரதமன் கதை மிகமென்மையான ஓர் இனிமையை அளிக்கிறது. யதார்த்தவாதக்கதை அல்ல, நீங்கள் சொல்வதுபோல இயல்புவாதக்கதை. ஏராளமான செய்திகள். நுணுக்கமான விவரிப்புகள். கதை ஒரு பெரிய ஒழுக்குபோல ஏராளமான மனிதர்களை அள்ளிக்கொண்டு செல்கிறது.

இத்தகைய கதைகளில் வழக்கமாக ஓரிரு மனிதர்களே வருவார்கள். பொதுவாக தமிழ்ச்சிறுகதை என்பதே ஒன்றோ இரண்டோ கதாபாத்திரங்கள்தான். இந்தக்கதையில் எத்தனை மனிதர்கள். ஒருசிலர் வெறும் குரல்கள். ‘அண்ணன் சொல்லித்தாறேன்’ என்று சமையலையே காமக்கலையாக மாற்றுபவரைப்போல. அத்தனைபேருக்கும் தனித்தனி ஆளுமைகள் உள்ளன.

மனிதர்கள் அங்கே ஒரு திரளாக இருக்கிறார்கள். காய்கறிகளும் பலசரக்குகளும்போல. அவர்களை எல்லாம் இணைத்து ஒரு சமையல் நடக்கிறது. அந்தச்சமையலின் உச்சத்தில் பிரதமராக, முதலாமராக இருக்கிறார் ஆசான். அவர்தான் இனிப்பு. விருந்து என்றால் பாயசம்தான் என்று கதை சொல்கிறது.

சிவராம்

பிரதமன் -கடிதங்கள்1

பிரதமன் -கடிதங்கள்2

பிரதமன் கடிதங்கள் 3

பிரதமன் கடிதங்கள் 4

பிரதமன் கடிதங்கள் 5

முந்தைய கட்டுரைமனசிலாயோ?
அடுத்த கட்டுரைசிரிப்புடன் புத்தாண்டு