ராஜ் கௌதமன் – கடிதங்கள்

_MG_7004

ராஜ் கௌதமனுக்கு விஷ்ணுபுரம் விருது

 

விஷ்ணுபுரம் விழா: பங்கேற்பாளர்கள்

அன்புள்ள ஜெ

 

ராஜ் கௌதமனின் ‘பாட்டும் தொகையும்..’ நூல் மதிப்புரையில் கடலூர் சீனுவின் ஒரு கேள்வி:

 

“தொல்காப்பியம் வகுத்து வைக்கும் திணைகள் சார்ந்த வைப்பு முறை .

 

முல்லை குறுஞ்சி மருத நெய்தலெனச் 

சொல்லிய முறையாற் சொல்லவும் படுமே

 

பண்டைய மரபில் வைப்பு முறை மிக முக்கியமானது . இங்கே தொல்காப்பியம் சொல்லும் வைப்பு முறை காடு, மலை, வயல், கடல். தமிழ் நிலவியலின் படி வடவேங்கடம் முதல் தென் குமரி வரை எனக்கொண்டால் மலை, காடு, வயல், கடல் என்றுதான் வரவேண்டும். ஆக எங்கே சிக்கல் ?”

 

இதை ராஜ் கௌதமன் எவ்வாறு பொருள் கொள்கிறார் என்று சீனு விளக்குகிறார். எனக்கு வேறு ஒரு pet theory உள்ளது.

 

தமிழில் கிழக்கு மேற்கு என்ற சொற்கள் கீழ் மேல் என்ற பொருளில் அமைந்தவை. சூரியன் கிழே தோன்றி மேலே செல்வதாக பழந்தமிழர் கருதியிருக்கலாம். Ecliptic கோட்டை தொடர்ந்து சென்றால் முடிவில் வருவது கேரளத்து அடர்காடுகள், அதை அவர்கள் தாண்ட இயலாமல் இருந்திருக்கலாம். அதை எதிர் வரிசையில் சொன்னால் முதலில் அடர்காடுகள், பின்னர் மேற்கு தொடர்ச்சி மலைகள், பின்னர் சமவெளி புல்நிலங்கள் கடலில் முடிகின்றன.

 

இதையே முல்லை, குறிஞ்சி, மருதம் நெய்தல் என்ற வைப்புமுறை சுட்டுகிறது என்று கருதுகிறேன்.

 

அன்புடன்

மது

 

 

அன்புள்ள ஜெ

 

ராஜ் கௌதமன் அவர்களைப்பற்றி தொடர்ச்சியாக வந்துகொண்டிருக்கும் கட்டுரைகள் அவரைப்பற்றி நெருக்கமாக அறிய உதவுகின்றன. இத்தனை கட்டுரைகள் ஓர் எழுத்தாளரைப்பற்றி எழுதப்படுவது அவர் விஷ்ணுபுரம் விருது பெறும்போது மட்டும்தான். அதற்கு முன்னர் மட்டுமல்ல அதற்குப்பின்னரும்கூட அனேகமாக எதுவுமே எழுதப்பட்டிருக்காது. இதுதான் தமிழகத்தின் இன்றைய நிலவரம். இந்தக்கட்டுரைகளில் எளிமையான வாசகப்பார்வை முதல் விரிவான ஆய்வு நோக்குகள் வரை வெளிப்படுகின்றன. ராஜ் கௌதமன் அவர்களின் பல நூல்கள் இன்றைக்குக் கிடைப்பதே இல்லை. தலித் ஆய்வாளர்கள்கூட பெரும்பாலும் அவரைப்பற்றிப் பேசுவதே இல்லை. இச்சூழலில் இந்த விருதும் விவாதமும் மிகமிக முக்கியமானவை என நினைக்கிறேன்.

 

இந்தத்தளத்தில் வெளியான கட்டுரைகளில் சுரேஷ் பிரதீப், கடலூர் சீனு, சுனீல் கிருஷ்ணன் ஆகியவர்கள் ராஜ் கௌதமனின் பண்பாட்டு ஆராய்ச்சியையும் காளிப்பிரசாத், மணிமாறன், பிரபு போன்றவர்கள் அவருடைய படைப்புக்களையும் விரிவாக ஆராய்ந்து எழுதியிருக்கிறார்கள். இத்தகைய பரவலான பலகோணங்களிலான ஆராய்ச்சிகள் ஓர் ஆசிரியரைப்பற்றி வெளிவரும்போதுதான் அவரைப்பற்றிய கோணம் முழுமையாக வெளிப்படுகிறது

 

எஸ்.ஜெகதீஷ்

ராஜ் கௌதமனின் அயோத்திதாசர் ஆய்வுகள்- சுனீல் கிருஷ்ணன்

ராஜ் கௌதமன் – பாட்டும் ,தொகையும் ,தொல்காப்பியமும் தமிழ்ச்சமூக உருவாக்கமும்-கடலூர் சீனு

உற்சாகமான பார்வையாளன்-(லண்டனில் சிலுவைராஜ்)-பிரபு மயிலாடுதுறை

ராஜ் கௌதமனைப் புரிந்துகொள்ளுதல்————இன்றைய கோட்பாட்டு விவாதங்களில் ராஜ் கௌதமன் எழுத்துக்கள்

ராஜ் கௌதமன் -ஆரம்பக் கட்ட முதலாளியமும் தமிழ்ச் சமூக மாற்றமும் – சுரேஷ் பிரதீப்

ராஜ் கௌதமனின் காலச்சுமை – சுரேஷ் பிரதீப்

ராஜ் கௌதமன் ‘கண்மூடிவழக்கம் எலாம் மண்மூடிப்போக’- கடலூர் சீனு

ராஜ்கௌதமனின் ‘ஆகோள் பூசலும் பெருங்கற்கால நாகரிகமும்’- சுரேஷ் பிரதீப்

ராஜ் கௌதமன் ‘லண்டனில் சிலுவைராஜ்’ -மணிமாறன்

ராஜ் கௌதமனை அறிய…

ராஜ் கௌதமனின் சிலுவைராஜ் சரித்திரம்

சிலுவைப்பாடு – காளிப்பிரசாத்

சுழித்து நுரைக்கும் வாழ்க்கை- சிலுவைராஜ் சரித்திரம்

ராஜ் கௌதமனுக்கு விஷ்ணுபுரம் விருது – கடிதங்கள் 6

ராஜ் கௌதமனுக்கு விஷ்ணுபுரம் விருது – கடிதங்கள் 5

ராஜ் கௌதமனுக்கு விஷ்ணுபுரம் விருது -கடிதங்கள் 4

ராஜ் கௌதமனுக்கு விஷ்ணுபுரம் விருது -கடிதங்கள்-1

ராஜ் கௌதமன் – விஷ்ணுபுரம் விருது-கடிதங்கள்-3

ராஜ் கௌதமனுக்கு விஷ்ணுபுரம் விருது -வாழ்த்துக்கள்-2

சிலுவைராஜ் சரித்திரம் பற்றி

ராஜ் கௌதமனின் உலகம்

ராஜ் கௌதமனும் தலித்தியமும்

பாட்டும் தொகையும் ராஜ் கௌதமனும் – வளவ. துரையன்

ராஜ் கௌதமன் -கடிதங்கள்

முந்தைய கட்டுரைஅடேய்கள்,மீம்கள் -கடிதங்கள்
அடுத்த கட்டுரை‘நினைவுகள்’ சிறுகதை – அனிதா அக்னிஹோத்ரி