கொரியா ஒரு கடிதம்

kor
பேரன்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு
நான் தற்பொழுது கொரியாவில் வாழ்கிறேன். என் சொந்த ஊர் மதுரை. நான் உங்களின் 5 வருட வாசகன் ஆனால் ஒருமுறை கூட தங்களை நேரில் கண்டதில்லை. கடந்த நான்கு வருடமாக கொரியாவில் Power electronics துறையில் ஆய்வு மாணவனாக படித்து  கொண்டிருக்கிறேன். சரியாக 20 மாதங்கள் முன்பு இந்தியா வந்தேன் என் கல்யாணத்திற்காக. என் துணைவி கீர்த்தனா இனியவள் அருண்மொழி அன்னையை போலவே. கல்யாணத்திற்கு பிறகு தங்களை வந்து கன்யாகுமரியில் பார்க்கலாம் என்று நினைத்தேன். ஆனால் இயலவில்லை, நேரம் இல்லாமையால் அல்ல, ஏதோ சொல்ல முடியாத தயக்கத்தினால். கூடவே எழுத்தாளர் அசோக மித்திரனின் இறப்பும் கூட, தாங்கள் கொதித்து கொண்டிருந்த நேரம்.
தற்பொழுகு நான் ஆய்வு முடிவுகளை (Thesis) எழுதி கொண்டிருக்கிறேன். அடுத்த மாதம் எனது இறுதி டிபென்ஸ். அடுத்த வருடம் பிப்ரவரி யில் முனைவர் பட்டம் வாங்கிவிடுவேன். கொரியாவிலேயே ஒரு கம்பெனியில் R & D துறையில் வேலை கிடைத்து விட்டதால் இங்கேயே பணி புரிய போகிறேன். விஷ்ணுபுரம் விழா நடக்கும் வேலையில் என்னால் இந்தியா வர இயலாது என்பதால் நான் கலந்து கொள்ளவில்லை.
கொரியாவின் மொழியான “ஹங்குகொ” வை நான் கற்று கொண்டு இருக்கிறேன் .  தங்கள் புத்தகங்களை இம்மொழியில் மொழியாக்கம் செய்யவும் கனவு கொண்டிருக்கிறேன், பார்க்கலாம்.
பாண்டியன் சதீஷ்குமார்
கொரியா
அன்புள்ள சதீஷ்குமார்
நலமாக இருக்கிறீர்கள் அல்லவா
கொரியமொழியை கற்பதைப்பற்றி எழுதியிருந்தீர்கள். அது பெரிய மனக்கிளர்ச்சியை அளித்தது. உண்மையில் நம்மவர்கள் உலகம் முழுக்க இருக்கிறார்கள். அங்கிருக்கும் பண்பாட்டை அறியவோ மொழியைக் கற்கவோ முயல்பவர்கள் மிகமிக குறைவு. உலகின் எந்த மொழியிலிருந்தும் நேரடியாக தமிழுக்கு ஏதேனும் வருவதோ இங்கிருந்து செல்வதோ நிகழ்வதே இல்லை. அந்த ஊக்கம் மிகமிக நிறைவளிக்கிறது. சமீபத்தில்கூட கொரிய மொழியைப்பற்றிய ஒரு குறிப்பு ராஜன் சோமந்துரம் ஜாரேட் டயமண்ட் பற்றி எழுதிய கடிதத்தில் வந்தது
வாழ்த்துக்கள்
ஜெ
முந்தைய கட்டுரைஇந்தியப்பயணம் ஒரு கடிதம்
அடுத்த கட்டுரைகுகை (குறுநாவல்) : 2