இரண்டு சிரிப்புகள்

laugh

அபிப்பிராய சிந்தாமணி [நகைச்சுவைக் கட்டுரைகள்] வாங்க

அன்புள்ள ஜெ

இன்று அதிகாலையில் சென்ட்ரல் ரயில் நிலையம் வரை செல்லவேண்டியிருந்தது. வழியனுப்பல் என்பது வாடசப் காலத்திலும் சோகமானதே….

அதிகாலைப்பொழுது எப்போதும் காலியான மின்சார ரயிலில் பயணம் செய்யும் வாய்ப்புகள் அமையும் நேரம். வழியில் ஒரு போஸ்டரில் இருந்த பிசிறில்லா பாண்டியனே என்ற வரி கண்ணில் பட்டது. சங்க இலக்கியத்தில் வரும் பொற்கை பாண்டியன் போல ஒரு காரணக்கதை கண்டிப்பாக இருக்கக்கூடும் என்று தோன்றியதால் திரும்பி வருகையில் கவனமாக அவ்விடத்தை நோக்கினேன். முழு போஸ்டரையும் படித்தபின் அது தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தலைவர் ஜான் பாண்டியன் அவர்களின் மனைவி பிரிஸில்லா பாண்டியன் என்று புரிந்தது..

வேதசகாயகுமார் தேவசகாயகுமாராக மாற்றப்படாவிட்டால் வேறசகாயகுமாராக  எழுத்து வேறாக அச்சாகியிருக்கும்.” என்ற அச்சுப்பிழை கட்டுரை வரிகள் (https://www.jeyamohan.in/925#.W8qb1crhU0O) ஞாபகம் வந்து மீண்டும் அந்தக்கட்டுரையை படித்து [அச்சுப்பிழை] ஒரு லாஃப்டர் தெரபியுடன் பொழுது புலர்ந்தது.

நன்றி

அன்புடன்

R.காளிப்ரஸாத்

அன்புள்ள ஜெ

நகைச்சுவைக் கட்டுரைகளில் வைணவம் ஓர் அறிமுகம் கட்டுரையில் ஒரு இடம்.

“பரமாத்மாவிலிலுருந்து பசுவிலிருந்து பால் வர்ரது மாதிரி பிரபஞ்சம் வந்துண்டிருக்கு. ஐந்து முலைக்காம்புகளும் பஞ்சேந்த்ரியங்கள். பாலை கறந்துக்கறது நம்மளோட மாயைன்னு சொன்னேன். வாயை மூடின்னுட்டான்”

”சிலபேர் அதைக்கடைஞ்சு வெண்ணையே எடுக்கறா”என்றான் நாணா. அது அத்தனை ஆழமாக தோன்றியதால் அதை அவன்தான் சொன்னானா என்ற ஐயம் அறிஞர்களுக்கு ஏற்பட்டு அவனை முற்றாக தவிர்த்துவிட்டார்கள்”

வாசிக்கும்போது வெடித்துச் சிரித்தேன். பின்னர் இன்று ஞாபகம் வந்த்து. ஆபீஸ் மீட்டிங்கில் ஒரு புகழ்பெற்ற அசடு ஒரு கருத்தைச் சொன்னது. வாய்க்குவந்தபடி அது சொன்னாலும் அப்போதைக்கு பயங்கர ஆழமான கருத்தாகத் தோன்றியது. அரைநிமிடம் மௌனமாக இருந்துவிட்டு அப்படியே கடந்துசென்றுவிட்டோம். இந்த வரியை இன்றைக்கு நினைத்துச் சிரித்தேன்

ராம்

***
அபிப்பிராய சிந்தாமணி -கடிதங்கள்
அபிப்பிராயசிந்தாமணி கடிதங்கள்
அபிப்பிராயசிந்தாமணி
கோவையாசாரம்!
முந்தைய கட்டுரைஇந்திரா காந்தி – சூழியல் அரசியலின் முன்னோடி! -பாலா
அடுத்த கட்டுரைதற்குறிப்பேற்றம்