திலீப்குமாருக்கு விருது

டி.எஸ்.துரைசாமி எழுதிய ஆரம்பகால நாவலான ‘கருங்குயில் குன்றத்துக்கொலை’ நாவலின் மறுபிரசுரமும் சாரல் விருது வழங்கும் விழாவும் வருகிற 6௧௨009 அன்று சென்னையில் நடைபெறவிருக்கிறது. நான் அதில் பங்கெடுத்து பேசவிருக்கிறேன்.

உல்லாசம், விசில் போன்ற படங்களின் இயக்குநர்களான ஜேடிஜெர்ரி இப்போது விளம்பரத்துறையில் தீவிரமாக இயங்கிக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் பாலு மகேந்திராவின் மாணவர்கள். நந்தா அப்டத்தில் பாலாவுடன் இணைந்து பணியாற்றியிருக்கிறார்கள். ஜேடி முன்பு ஜோசப். டி சாமி என்ற பேரில் கவிதைகளும் கதைகளும் எழுதியிருக்கிறார். கனவுகளைப்பேசவந்தவன் என்ற அவரது கவிதைத்தொகுதி அக்காலகட்டத்தில் பேசபப்ட்டது. சுந்தர ராமசாமியின் பழைய காலச்சுவடு இதழில் என் முதல் கவிதை பிரசுரமான அதே இதழில்தான் அவரது கவிதைய்யும் பிரசுரமானது. ஜேடியின் தாத்தான் கருங்குயில் குன்றத்துக்கொலை நாவலை எழுதிய டி எஸ் துரைசாமி. தோழமை வெளியீடாக அந்நாவல் இப்போது அவர்கள் முயற்சியால் மறுபிரசுரம் செய்யப்படுகிறது.

திலீப் குமாருக்கு இவ்வருடத்திய சாரல் விருது வழங்கப்படுகிறது. தமிழின் முக்கியமான சிறுகதையாசிரியர்களில் ஒருவரான திலீப் நெடுங்காலமாகவே என் இனிய நண்பர். உற்சாகமான உரையாடல்காரர். அவரது மெல்லிய நகைச்சுவை ஓடும் படைப்புகள் அதிகம் கவனிக்கபப்டாதவை,. திலீப் குமாரை வாழ்த்துகிறேன்

 

**

ராபர்ட் ஆரோக்கியம் அறக்கட்டளை வழங்கும் சாரல் இலக்கிய விருது வழங்கும் விழாவும்

 டி எஸ் துரை சாமிஎழுதிய ‘கருங்குயில் குன்றத்துக்கொலை’ நாவல் வெளியீட்டுவிழாவும்

இடம்  ஃபிலிம் சேம்பர் அரங்கம் சென்னை

நாள் 6-1-2009  செவ்வாய்
நேரம் மாலை ஆறுமணி

சாரல் இலக்கியவிருது பெறுபவர்:  திலீப்குமார்

பங்கேற்போர்

பாலுமகேந்திரா
வே.இறையன்பு
தேனுகா
ஜெயமோகன்
ரவி சுப்ரமணியன்
பெர்னாf டி சாமி
ஜேடி0ஜெர்ரி

தமிழ்நாவலின் முதல்படிகளில் ஒன்று…

கருங்குயில் குன்றம், குறள்:கடிதங்கள்

முந்தைய கட்டுரைநூல்கள்,கடிதங்கள்
அடுத்த கட்டுரைசென்னையில்…