மலேசிய இலக்கிய அரங்கு -மதுரையில்

அறிவிப்பு

மலேசிய இலக்கியத்தைப் பரவலான கவனத்திற்குக் கொண்டுச் செல்லும் முயற்சியில் யாவரும் பதிப்பக ஏற்பாட்டில் மூன்று மலேசிய  நூல்களின் அறிமுக விழா 21.10.2018 (ஞாயிறு) பிரேம் நிவாஸ் மஹாலில் நடைபெறுகிறது.

மா.சண்முகசிவாவின் சிறுகதை நூல் குறித்து எழுத்தாளர் இமையம், விஜயலட்சுமி மொழிப்பெயர்ப்பில் வெளிவரும் கே.எஸ்.மணியத்தின் சிறுகதைகள் குறித்து பவா. செல்லதுரை மற்றும் ம.நவீன் தொகுத்த மீண்டு நிலைத்த நிழல்கள் எனும் நேர்காணல் தொகுப்பு குறித்து சுனில் கிருஷ்ணன் ஆகியோர் உரையாற்றுவர்.

இரா.சரவணதீர்த்தா தொகுக்கும் இந்நிகழ்ச்சியில் மா.சண்முகசிவா, விஜயலட்சுமி மற்றும் ம.நவீன் ஆகியோர் ஏற்புரை ஆற்றுவர்.

காலை 10.00 மணிக்குத் தொடங்கும் இந்நிகழ்ச்சி நண்பகல் 1 மணி அளவில் நிறைவுறும். மலேசியாவில் தரமான இலக்கியங்களை பரவலான கவனத்துக்கு எடுத்துச்செல்ல யாவரும் – வல்லினம் பதிப்பகங்களின் கூட்டுமுயற்சிக்கு வாசகர்களும் எழுத்தாளர்களும் கலந்துகொள்ள அன்புடன் அழைக்கப்படுகின்றனர்.

ம.நவீன் / M.Navin

No Tel : 0163194522

முந்தைய கட்டுரைகெடிலமும் சுந்தர சண்முகனாரும்
அடுத்த கட்டுரைலீனா மணிமேகலையின் குற்றச்சாட்டு