குரியன்,கிளாட் ஆல்வாரிஸ் -கடிதம்

குரியன்
குரியன்

குரியனும் சில எண்ணங்களும்

அன்பின் ஜெ..

 

 

ஆர் அவர்களுக்கு நன்றி.

 

அவர்  கடிதத்தில்  உள்ள  கருத்துக்களில்  சில  விலகல்கள்.  சொல்லிவிட  வேண்டும்  எ ன்பதால்  எழுதுகிறேன்.

 

அ. க்ளாட்  ஆல்வாரிஸ் பற்றிய  குறிப்புகளை இல்லஸ்ட்ரேட் வீக்லி  வெளியிட்டது உண்மை. வெண்மைப் புரட்சி  பற்றிய விமர்சனங்களை,  எகனாமிக்  அண்ட்  பொலிட்டிகல்  வீக்லியும்  வைத்திருந்த்து.

 

 

ஆ.  எம்.எஸ்.ஸ்வாமிநாதன்,  இந்திய வேளாண் ஆராய்ச்சி  நிறுவனத்தின் இயக்குநராக, இருந்து,  பின் பிலிப்பைன்ஸில்  உள்ள உலகநெல்  ஆராய்ச்சி நிலையத்தின்  இயக்குநராகச் சென்றார். அப்போது,  அவர் இந்திய நெல்  ரகங்களை,  பிலிப்பைன்ஸ்  நாட்டுக் கடத்திச் சென்றார்  என்னும் குற்றச்சாட்டை  வைத்தார். The  Great g ene Robbery   என்ற  தலைப்பில்  எழுதிய  கட்டுரையை,  இல்லஸ்ட்ரேட்டட்வீக்லி வெளியிட்டது.

 

 

வெண்மைப்  புரட்சியைத் தோற்கடிக்க,  பன்னாட்டு நிறுவனங்களிடம்  நிதி உதவி பெற்றார்  எனில்,  இந்திய  நெல்  ரகங்களின்  திருட்டு  என எழுத யாரிடம் உதவி  பெற்றிருப்பார்?

 

க்ளாட் ஆல்வாரிஸ்  மீது வைக்கப்படும்  குற்றச்சாட்டுகளுக்கு  ஆதாரங்கள்  இல்லாத வரையில்,  அவை வெறும் குற்றச்சாட்டுகளே.

 

 

வெண்மைப் புரட்சி  பற்றி அவர் வைத்த விமர்சனங்கள் பலவும்,  புள்ளி விவரங்களோடு  தவறு  என  நிரூபிக்கப்  பட்டு விட்டன.   இன்றுஇந்தியா உலகின் மிகப் பெரும்  பால் உற்பத்தியாளர். ஆனால், அவர் வைத்த குற்றச்சாட்டுக்கள்,  தேசிய பால்  வள வாரியத்தைச் சற்றே உலுக்கி விட்டது. ஆங்கிலத்தில்  ஒரு சொலவடை உண்டு, “ “Not only  must  Justice be done;  it must  also be seen to be done.”   என்று.   நாம்நல்லபடியாக  வேலை செய்தால் மட்டும் போதாது . வேலை செய்தது,  பதிவு செய்திருக்க ப் பட வேண்டும்  என்பது முக்கியம் என்று  தேசிய பால்வளவாரியம் உணர்ந்து,  வெண்மைப்  புரட்சி பற்றிய்  தகவல்களைத்  தொகுத்து, க்ளாட் ஆல்வாரிஸூக்கு  பதிலாகத் தந்தது . திருபுவன் தாஸ்  படேல் ஃப்வுன்டேஷன்  துவக்கப்பட்டு,  மகளிர்  மற்றும்  குழந்தை நலத்  திட்டங்கள்  வகுக்கப்பட்டன.

 

அதே போல் தான் நெல் ரகங்களைத் திருடியதாக ஸ்வாமிநாதன் மீது வைத்த   குற்றச்சாட்டும் . அவர்  அந்தக்  கட்டுரையை  எழுதியபோது, ஒரு நாட்டின்  பயிர் மற்றும் பல்லுயிர்  என்பது  அந்த நாட்டின் வளம்  என்னும்  கருதுகோள் உருவாகாத  காலம் . அது பற்றிய  ஒரு விவாத்த்தை உருவாக்கியது.

 

க்ளாட் ஆல்வாரிஸின்  கட்டுரைகள் நான்  படித்த இர்மாவின்  நூலகத்தில் இருந்தன. குரியன் அதைப் பெரிதாகப் பொருட்படுத்தவில்லை.  அந்தக் கருத்தியலின்  இருப்பை அங்கீகரித்தே இருந்தார்.  அவை பொதுமக்கள் இடையே ஒரு அசைவையும்  ஏற்படுத்த வில்லை.  ஆனால், ஒரு விமர்சனக் குரலாக,  நிறுவனங்களை  பரிசீலனைக்கு உட்படுத்தின. அந்த அளவில், அவை பொருட்படுத்தத் தக்கவையே.

 

 

இடிப்பாரை  இல்லா ஏமாரா மன்னன் கெடுப்பார்

இல்லானும்  கெடும்

 

 

பசுமைப் புரட்சிக்கு  வித்திட்ட சி.சுப்ரமணியனுக்கும்,  எம்.எஸ்.ஸ்வாமிநாதனுக்கும்  கொடுக்கப்பட்ட  பாரத் ரத்னா, அவருக்குக்  கொடுக்கப்படவில்லை.  குஜ்ராத் அமுல்  கூட்டுறவு சங்கத் தேர்தல்களில்,  வெற்றி பெற்ற  வலதுசாரி பாஜக, அமுலின்  சேர்மனாக இருந்த  அவருக்குக் கொடுக்கப் பட்டிருந்த ஒரு பழைய அம்பாசடர் காரைப் பிடுங்கிக் கொண்டார்கள். அவர் இறந்த போது, மன்மோகன் சிங் ஸ்ரிஹரிகோட்டாவில் ராக்கெட் ஏவுவதைப் பார்த்துக் கொண்டிருந்தார். அன்று, மோதி, அவர் இறந்த (ஆன்ந்த்) ஊரில் இருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ள நதியாத் என்னும் ஊரில் ஒரு மாட்டுத் தீவனத் தொழிற்சாலையைத் திறந்து வைத்துக் கொண்டிருந்தார். இருவருமே அஞ்சலி செலுத்தச் செல்லவில்லை. அவரை அவமானப்படுத்தியவர்கள் அரசியல்வாதிகளும், வலதுசாரிகளும் தான்.

 

 

பாலா

முந்தைய கட்டுரைகுளிர்ப்பொழிவுகள் – புகைப்படங்கள்
அடுத்த கட்டுரைபெண்கள் இந்தியாவில் தனியாகப் பயணம் செய்யலாமா?