“ இதுவரை எமது மண்ணில் இருந்து பெரிதளவு செல்வத்தை எடுத்தீர்கள். அதிலிருந்து சிறிது பணத்தை இந்த உண்டியலில் போடுங்கள் “ என்ற வார்த்தை ஆதிவாசிகளின் அருங்காட்சியகத்தின் உள்ளே சென்றபோது கதவருகே உள்ள கண்ணாடி உண்டியலில் அருகே ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்தது.
வார்த்தைகளின் வலிமையை உணர்ந்தேன். அந்தக் கூர்மையான சொற்கள் என்னிதயத்தில் ஆழமாகத் தைத்தது.
ஆஸ்திரேலியாவின் பழங்குடிப்பின்னணி குறித்து நோயல் நடேசன் எழுதிய பதிவு