ஊர்வன்கள் -கடிதம்

theoryrep

ஊர்வன்களின் உலகம்!

ஜெ,

 

நரம்புச் சிக்கல் , உள சிக்கல் உள்ளவர்கள் இப்படி  அதிதீவிர abstract உலகில் சஞ்சரிப்பது ஒரு வகை சுகம். ஒரு வகை பொறுப்பு துறப்பு

 

வழக்கறிஞர்களிடம் ஆலோசனை பெறுவதற்கு பதிலாக,

 

உங்களை இலுமினாட்டியாக மாற்ற வேண்டும் என்பதுதானே குறிக்கோள் ,இதை இலக்கியத்திற்குள் கொண்டு வந்துவிடுங்கள் , இதை வைத்து ஒரு நாவல் எழுதி விட்டு இலுமினாட்டி ஆகி விடுங்கள் …ஓய்ந்து விடுவார்கள்.

 

ஏற்கனவே மோடி,கமல் ரஜினி இவர்கள் எல்லாம் இலுமினாட்டியில் இருக்கிறார்கள் என்று கூறி அவர்களை காப்பாற்றுங்கள் என்று கூவி  ஒரு கூட்டம் போராடுகிறது.

 

 

அன்புடன்

 

விஜய்

 

குறிப்பு > உங்கள் தளத்தில் இது பற்றி எழுதுவதால் இது மேலும் முக்கியத்துவம் பெறுகிறது.

 

*

 

” ஐந்து அத்தியாயத்திலும் ஊர்தன்களின் வாழ்வு முழுவதும் விளக்கப்பட்டுள்ளது.எவ்வளவு தகவல்கள்? .அவர்களில் ஒருவர் அன்றி இவ்வளவு தகவலுக்கு சாத்தியம் இல்லை”>

 

சார் – இவர் உண்மையை தானே பேசுகிறார் !!! நீங்கள் ஆஸ்திகன் அம்சம் இல்லையா? காளிப்பிரசாதை ஆந்தியூர் மணி அவர்களிடம் பேசச் சொல்லி வெண்முரசு வாசகர் கூடுகைக்கு வரவைக்க வேண்டும், நிறைய புது விஷயங்கள் தெரிந்துகொள்ளமுடியும்.

 

ஊர்வன் ஊர்தன் எல்லாம் முயங்கி தான் ‘ஊர்த்வ’ என்பது வந்திருக்கமுடியும் இல்லையா ?

மதுசூதன் சம்பத்

 

அன்புள்ள ஜெ

 

ஊர்வன்கள் பற்றிய கட்டுரை வாசித்தேன்.

 

இவ்வகையான கட்டுக்கதைகள் ஒருவகையான உளவியல் சிகிச்சையாக அமைகின்றனவா? இல்லாவிட்டால் இவற்றைப் பேசிக்கொண்டிருப்பவர்களுக்கு ஏன் இத்தனை பெருங்கூட்டம் கூடுகிறது? இது இங்கு மட்டும் அல்ல உலகம் முழுக்க

 

முன்பு தேவர்கள், பேய்கள் என்றெல்லாம் புராணங்கள் இருந்தன. அவற்றை மறுத்து கட்டுடைத்துவிட்டார்கள். ஆகவே புதியபுராணங்களை உண்டுப்பண்ணுகிறார்கள் என்று சொல்லலாமா?

 

ஸ்ரீதர்

 

முந்தைய கட்டுரைகம்போடியா- பாயோன் – சுபஸ்ரீ
அடுத்த கட்டுரைசாதியும் நட்பும்