அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
வணக்கம்
‘இலுமினாட்டிகளின் பிரச்சாரகன்’ படித்த பின்னர் நான் சில வருடங்களுக்கு முன் வேடிக்கையாக எழுத்திய ஒரு பதிவை உங்களிடம் காட்டலாம் என்று தோன்றியது. ஓய்விருக்கும் போது படித்துப் பாருங்கள். அவசியம் பின் குறிப்பை படித்துவிடுங்கள். நன்றி
அ.பாண்டியன்
அவர்கள் சூழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
****
அன்புள்ள ஜெ
நீங்கள் விளையாட்டாக இப்பதிவுகளைப் போடலாம். ஆனால் உண்மையிலேயே கணிசமானபேர் இதை நம்புகிறார்கள். இன்று தமிழில் மிகப்பெரிய கருத்தியல் செல்வாக்கு செலுத்துபவர்கள் சிலர் உண்டு. சீமான், ஹீலர்பாஸ்கர். இணையத்திலே இவர்களின் பேச்சுக்களுக்குத்தான் மிக அதிகமான எதிர்வினைகளைக் காணமுடிகிறது இவர்களெல்லாருமே இலுமினாட்டிச் சதி பற்றிப் பேசுபவர்கள். சில ஆன்மிககுருக்களும் இலுமினாட்டி பற்றி போதனைசெய்கிறார்கள். இன்று இவர்களின் மேல் நம்பிக்கைகொண்டவர்கள் தமிழகத்தில் எப்படியும் ஒருகோடிப்பேர் இருப்பார்கள். இவர்களின் உரைகளுக்குக்கீழே உள்ள எதிர்வினைகளையும் அவற்றுக்கு இருக்கும் ஹிட்களின் எண்ணிக்கையையும் பாருங்கள் நான் சொல்வதுபுரிந்துகொள்ளமுடியும்
கேலி செய்வதற்குப் பதிலாக இந்த நம்பிக்கை எப்படி உருவாகி நீடிக்கிறது இதன் சமூகவியல் முக்கியத்துவங்கள் என்னென்ன என்பதைத்தான் உங்களைப்போன்ற அறிவியக்கத்தினர் ஆராய்ந்து சொல்லவேண்டும்
முத்துக்குமரன்
***
திரு ஜெமோ
உங்களுக்கு வந்த கடிதங்கள் மேலோட்டமான அபிப்பிராயங்கள் அல்ல. அவற்றில் ஆணித்தரமான தரவுகள் உள்ளன. அவற்றை நீங்கள் இதுவரை மறுக்கவில்லை என்பதையும் மறுக்கமுடியாது என்பதையும் மட்டும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்
ஜெயக்குமார்
***
அன்புள்ள ஜெமோ அவர்களே,
இல்லுமினாட்டி பற்றி கட்டுரை வாசித்த போதே உங்கள் பதில் சுருக்கமாகத்தான் இருக்கும் என ஊகித்தேன். ஆனால் உங்கள் பதில் நல்ல புனைவு எழுத ஒரு ஸ்குரூ கொஞ்சம் லூசாக இருக்கவேண்டும். நீங்கள் நம்ம இனம் வருக என அழைப்பு வந்தது
கடிதம் எழுதும் அளவுக்கு வாசிக்கவும் யோசிக்கவும் வைத்தது. உங்களை இல்லுமினாட்டி பெரியாரின் வாரிசு என கதைகட்டினாலும் ஆச்சரியம் இல்லை.
ஜெயப்பிரகாஷ்
***