நண்பர்கள் கூடி நிகழ்த்தும் நற்றிணை இலக்கிய கூடல் மூன்றாம் ஆண்டினை நிறைவு செய்கிறது . சங்க இலக்கியம் முதல் இன்றைய இலக்கியம் வரை கடலூர் சுற்று பகுதியை சேர்ந்த வாசகர்கள் இலக்கியத்தை அறிமுகம் கொள்ள ஒரு கூடுகையை மாதம் தோறும் நிகழ்த்துவது என துவங்கிய சிறிய கூடுகை இன்று மூன்றாம் ஆண்டினை நிறைவு செய்கிறது . எழுத்தாளர்கள் கீரனூர் ஜாகிர் ராஜா , பாவண்ணன் ,ஜெயமோகன் இவர்களை தொடர்ந்து நாஞ்சில் நாடன் அவர்களின் வருகை கொண்டு கூடுகை உவகை எய்துகிறது .
24/6/18 ஞாயிரு மாலை .ஆறு மணிக்கு . நற்றிணை இலக்கிய கூடுகையில் எழுத்தாளர்
திரு நாஞ்சில் நாடன்
சொல்லெனும் பெரும்காடு
எனும் தலைப்பின் கீழ் உரையாற்றுகிறார் . இலக்கிய வாசகர்களும் , இலக்கியத்தை அறிமுகம் செய்துகொள்ள விருப்பம் கொண்டோரும் வருக வருக .
விட்டல் மழலையர் பள்ளி .
லேனா மெடிக்கல் பின்புறம்
மஞ்சக்குப்பம் .
கடலூர்
.தொடர்புக்கு கடலூர் சீனு 9486331348.