சென்னை கிருஷ்ணா ஸ்வீட்ஸ் – நமது நம்பிக்கை இதழ் சார்பில் தொடர்சொற்பொழிவு ஒன்று நிகழ்ந்துவருகிறது. வெவ்வேறு துறைகளில் சென்ற ஆண்டுகளில் நிகழ்ந்துவரும் மாற்றங்களைப் பற்றியது இந்த உரைத்தொடர். இலக்கியத்தில் நிகழ்ந்துவரும் மாற்றங்களைப் பற்றி நான் பேசவிருக்கிறேன்.
சென்னையில் பேச்சுக்கச்சேரி அமைப்பின் சார்பில் நடந்த குறுந்தொகை உரைக்குப்பின் நான் முழுமையான தனியுரை எதையும் ஆற்றவில்லை. இது நீண்ட தனியுரை. நண்பர்கள், வாசகர்கள் அனைவரையும் அழைக்கிறேன்.
இடம்: பாரதியவித்யாபவன் கிழக்கு மாடவீதி மைலாப்பூர் சென்னை 4
நாள்: ஜூன் 19 செவ்வாய் கிழமை
காலம்: மாலை 6.30 மணி
தலைப்பு ‘இலக்கியத்தில் மாற்றங்கள்’