நவீன நாவல் -எதிர்வினை, சுனீல் கிருஷ்ணன்
கொச்சின் துறைமுகப் பகுதி இயற்கையின் மாபெரும் கொடை. ஒரு புறம் இரண்டாகப் பிரிந்த பெரியாற்றின் கழிமுகமும்(estuary), மற்றொரு புறம் ஆலப்புழாவிலிருந்து , குமரகம் வரை நீண்டுள்ள, வேம்பநாடு ஏரி நீரும், நடுவில் backwater எனப்படும் உப்பங்கழிப் பகுதியும், கடலின் முதன்மை முகத்துவாரத்தில் அரபிக்கடலின் சீற்றமும், துறைமுக கட்டுமானப் பகுதிகள் என அந்த பகுதியில் படகு சவாரி செய்வது விழியை நிறைத்து மனதினை உள்நிரம்பி பொங்கி வழிய வைக்கும் ஒரு அலாதியான அனுபவம். அந்த துறைமுகத்தின் ஒரு பகுதியாக அமைந்திருக்கும் வல்லர்புரம் தீவில் சவுதி அரசுக்கு குத்தகைக்கு விடப்பட்ட பகுதியில் பல வண்ண இரும்பு பெட்டிகள் வரிசையாக அடுக்கப்பட்டிருக்கும் . முதல் பார்வைக்கு மாறாமல் நிலை பெற்றிருப்பவைகள் போலத் தோன்றும் அந்தக் காட்சி. ஆனால் கப்பலிலிருந்து மாபெரும் Crane எனப்படும் பெட்டிகளை லாவகமாகத் தூக்கி இறக்கி, பின் புதிய பெட்டிகளை கப்பலில் ஏற்றும் இயந்திரங்களின் ஓயாத இயக்கம் இடைவெளியில்லாமல் இயங்கிக் கொண்டிருக்கிறது
Container எனப்படும் 20 அடி 40 அடி கொள்கலன் பெட்டியில் அலகலகாக சரக்குகளை பிரிக்கப்பட்டு, ,பின் என அடுக்கடுக்காக வரிசையில் பொருத்தி பொருட்களை ஏற்றுமதி இறக்குமதி செய்யும் இந்த கொள்கலன் தொழில்நுட்பத்தின் வயது 50 ஆண்டுகள் தான். இன்று உலகின் 90 % சரக்கு போக்குவரத்து கொள்கலன் கப்பல் போக்குவரத்து வழியாகவே நிகழ்கிறது. முன்னெப்போதுமில்லாத வகையில் கப்பல்கள் நெரிசலுடன் வாரக்கணக்கில் துறைமுகங்களில் நிற்கத் தேவையில்லை. சில மணி நேரங்களிலேயே ஏற்றுமதியும் இறக்குமதியும் முன்னரே மென்பொருட்கள் மூலம் வகுக்கப்பட்ட வரிசையில் நிகழ்ந்துவிடும். இரு நூற்றாண்டுகளாக உலக வர்த்தகத்தை கட்டுப்படுத்திய சில கப்பல் கட்டும் தொழில் முதலாளிகளின் கையில் மட்டும் ஏகமாக இருந்த மொத்த சரக்கு கப்பல் வணிகம், முற்றாக தடம் தெரியாமல் அழிந்து விட்டது, அல்லது கொள்கலன் போக்குவரத்தில் புதிய போட்டியாளர்களாக நுழைந்து விட்டார்கள். லாஸ் ஏஞசல்ஸ், ஷாங்காய், சிங்கப்பூர், சிட்டகாங், சென்னை துறைமுகங்களில் முதுகொடிய சரக்கு இறக்கிய தொழிலாளர் திரள் வேறுதோழில்களுக்கு சென்றதால் வழக்கொழிந்து போனார்கள். சில நூறு எண்ணிக்கையில் , மஞ்சள் தொப்பியணிந்து இன்று கையடக்க கியர்களை கண்ணாடி கண்காணிபபு அறையினுள் நின்று பாதுகாப்பாக இயக்கும் பயிற்சி பெற்ற தொழிலாளிகள் ஒட்டுமொத்த துறைமுகத்தின் இயக்கத்தினை கட்டுப்படுத்துகிறார்கள்.
சிட்டகாங்கிலிருந்து துணிகள் ரோட்டர்டம்மிற்கும், ஸ்பானிய தக்காளிகள் துபாய்க்கும், சீனாவிலிருந்து நெகிழிப் பொத்தான்கள் திருப்பூர் துணிக்கடைகளுக்கும் முன்னரை விட 50 மடங்கு வேகத்தில், வெறும் 5% வீத போக்குவரத்து செலவில் நிகழ்கின்றன. இதன் தோற்றமும் வளர்ச்சியும் உலகளாவிய வர்த்தகத்தின் தேவையின் Demand எனப்படும் அழுத்தத்தின் விளைவாக supplyயாக நிகழ்ந்த இந்த புதிய தொழில்நுட்பம் என்றாலும். புதிய துறைமுகங்களும், இந்த புதிய தொழில்நுட்பமும் நம்பவே முடியாத வண்ணம் நாம் வாழும் சமூகத்தினை அது மாற்றம் செய்து வருகிறது. நாவல் இலக்கிய தோற்றத்தையும் வளர்ச்சியையும் நான் அண்மை காலத்தில் இலக்கியத்தில் நிகழ்ந்த மாபெரும் பாய்ச்சலாகவே கருதுகிறேன்.
ஆரம்ப காலத்தில் பயணத்தின் போது நீள் கதைகளை வேகமாக படிப்பதற்காக கொண்டுவரப்பட்ட நாவல் வடிவம், அதன் பின்னர் Book of life (வாழ்வின் புதினம்) , (உண்மையின் விளையாட்டு) Game of Truth , Pluralism ( பன்மைகுண வெளிப்பாட்டு ) வடிவம் என உருமாறி, இன்று வரலாற்றாய்வு, மத ஆராய்ச்சிகளை விட ஒரு படி மேலாக வைக்கப்பட்டு. தொல்பொருளாராய்ச்சி அளவிற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் அளவிற்கு வளர்ந்திருக்கிறது.
நாவல் என்பதை மொழி வழிக் பெருங்கதையாடல் மூலமாக, ஒட்டு மொத்த மனித வாழ்வினை பல குரல்களில், கோணங்களில் வெளிப்படுத்தப்படும் ஒரு கலை வடிவம் என கூறலாம். வாழ்வின் ஒட்டுமொத்தத்தை காட்டுவதே அதன் நோக்கம். பலமுகத்தன்மை, இணைந்து பிரிந்து செல்லும் சிடுக்குகளால் பின்னப்பட்டிருப்பது, காலந்தோறும் தன்னை மறுவரையறை செய்துகொண்டு வளருவது, அதன் மற்றுமொரு பண்பு. அறிவியல், அரசியல் போன்ற பெருந்துறைகளின் வளர்ச்சிக்கு இணையான இலக்கியத்தின் சார்பிலிருந்து ஒரு பதில். மற்ற அனைத்து துறைகளையும் தன்னுள் ஈர்த்து பொதிந்து கொண்டு, வளர்ந்து கொண்டே வரும் வடிவம் தான் நாவல். . இத்தாலிய விமர்சகர் மஸ்ஸோனி.
‘Nothing is important but life. ஆகவே நான் ஒரு நாவலாசிரியன். என்னை துறவியை விடவும், ஒரு அறிவியலாளனை விடவும், ஒரு தத்துவவாதி, ஒரு கவிஞனைவிடவும், இவையனைத்தையும் முழுமையானவனாக ஒரு நாவலாசிரியானாக என்னை இவர்களை விட மேலானவனாக உணர்கிறேன். ஏனென்றால் இவர்களனைவரும் ஒன்றாக இணைந்தவன் நாவலாசிரியன் என்கிறார்.’ டி எச் லாரன்ஸ். தன் படைப்பினை முன்னிறுத்த, வாசகனை சீண்டி அதனுடன் உரையாட வைக்க ஒரு வெல்விளியாக லாரன்ஸால் எழுதப்பட்ட ஒரு கட்டுரையில் எடுக்கப்பட்டது. ஆனால் அவரின் இந்த வாசகம். ஆனால் நாவலின் முக்கியத்துவத்தை இன்றும் விளக்க பொருத்தமான வாசகமாக எனக்குத் தோன்றுகிறது.
நாவலை மொழி வழி அழகியல் வெளிப்பாட்டின் உச்சமாக பார்ப்பது அண்மை காலத்தில் ஏற்பட்ட மாற்றம்தான். அது இனி எப்போதும் மெல்லுணர்ச்சி கொண்டு மகிழ்வூட்டும் வணிக கலையாக(populitst entertainmet), (Allegory) இரு அடுக்கு உருவகமாக்க இலக்கிய ஆக்கமாக பார்க்கப்படவில்லை. ஏனென்றால் விரிவான வாழ்வினை வெளிப்படும் போது வாசகனுடன் எழுத்தாளனும் இணைந்து மேலான உண்மையைத் தேடும் ஒரு இலக்கிய வடிவமாக வளர்ந்திருக்கிறது. கடந்த இருநூறு வருடங்களில் மானுட மேலான அறம்(Moral), அண்டத்திலுள்ள அனைத்தையும் அலசும் (Cosmological), மதம் மற்றும் வரலாற்றாய்வினால் அறியப்படும் உண்மைகளை செய்யும் (Historical and Theological truths) கருவியாக. அறிவியல், வரலாறு, தத்துவத்திற்கு மாற்றாக மானுட அறிவினை அறிந்துகொள்ள ஒரு மாதிரியாக பார்க்கப்படுகிறது
முன்னோடி நாவலாசியரான தஸ்தோவெஸ்கி, ‘அவனுடன் சண்டையிடும் எண்ணம் சட்டென்று எனக்கு வந்தது’ என்கிறார் சூதாடி நாவலில் தஸ்தோவெஸ்கி, ஆழ்மனத்தின் ஒளித்து வைத்த வன்மம் வெளிப்படும் எண்ணத்தை விவரிக்கிறார். தஸ்தோவெஸ்கியின் பாத்திரங்கள் ஊகிக்காத கணத்தில் சீற்றம் சீரற்ற மனப்போக்கினை வெளிப்படுத்துகிற.வகையில் படைக்கப்பட்டிருக்கின்றன. அது முந்தைய ஐரோப்பிய நாவல்களிலில் என்றுமே இருந்திராத ஒரு மீறல். கரம்சோவ் தந்தையின் முதல் மனைவி இறந்த பிறகு, ஒரு சாரார் அவர் வீதியெங்கும் களிப்புடன் ஆடியபடியே கொண்டாடினார் எனவும். மறு சாரார் காயம்பட்ட இரு சிறு குழந்தை போல அவர் அழுதார் எனவும் கூறினார்கள். எழுத்தாளனின் குரல் ‘இரண்டுமே மிகச்சரியான அவதானிப்புகளாகத்தான் ரிக்கும் என்கிறார். அவளிடமிருந்து தன் விடுபடலுக்காக கொண்டாட்டமும். தான் அவளை பிரிந்ததற்காக அழுகையும் அவரிடம் ஒரே சமயத்தில் நிகழ்ந்தது. என்கிறார்.
நாவலாசியரின் கடமை கறாரான குணங்கள் உடைய பாத்திரப் படைப்பு கிடையாது. ஒழுங்கற்ற பன்மைத்தன்மையுள்ள மொழியில் கதாபாத்திரத்தின் உள்மனச் சிதைவு (inner crisis), வாழ்க்கையின் அடுக்குகளின் சிக்கல்களை (Multiplicitiy of life), எண்ணவெளிப்பாட்டின் முரண்களையும் (intensifying contrast expression) கொண்டு வருவதுதான். நாவலாசிரியன் எல்லோரும் புரிந்து கொள்ளக்கூடிய ஒரு மெய்யுலகின் படைப்பது மட்டுமல்ல. பொய்மையும் உண்மையும் கூட்டாக அமர்ந்து விளையாடும் ஒரு மறைவெளியிலில் வாசகனை கூட்டி வந்து அவனுக்கு அனுபவத்தை நிகழ்த்தி தானும் பெற்றுக் கொள்வதும்தான். நாவல் தரக்கூடாத ஏதாவது ஓர் உணர்வு இருக்குமெனில் அது கச்சிதத்தன்மை மட்டுமேயாகும்.நாவலின் கதைசொல்லி அதீத அறிவுடன் பேசுகிறான். இறந்தவர்களின் குரல்கள் உயிருள்ளவர்களுக்கு கேட்கின்றன. கடந்த காலத்தின் குரல்கள் நிகழ்காலத்தில் கேட்கின்றன.
புத்தொளி காலத்தில். paragone என்றொரு விவாதப்போக்கு இருந்திருக்கிறு. சிற்பம் ஓவியம் என்கிற முற்றிலும் வெறுபட்ட கலைவடிவங்களின் அழகியல் ரீதியில் ஒப்பிட்டு விவாதிக்க விடுதல். இதனால் ஒன்றின் சாத்தியமான சாதகங்களை மற்றொன்று பெற்று முன்னகர்வதற்கு வாய்ப்புண்டு. – இருவேறு கலைகளை ஒப்பிட்டு விவாதித்து ஒன்றின் சாரத்தை மற்றொன்று உள்வாங்கி, இரண்டையும் வளர்க்கும் போக்கு இருந்திருக்கிறது. வரலாறு, தத்துவம், அறிவியல், சூழலியல், அரசியல், மதம், என அனைத்து துறைகளுடன் உரையாடி, அதன் சாதகமான போக்கினை பெற்று வளர்ந்து வரும் வடிவம் நாவல் எனலாம்.
மழை என்றால் என்ன என்பதை முதன் முறையாக, என் கல்லூரி பருவத்தில் மூணாறு மேற்கு தொடர்ச்சி மலைக்கு, பருவமழை உச்சநுனியான காலத்தில் கானுலா சென்ற போது, உணர்ந்து அறிந்து கொண்டேன். அதுவரை மதுரையில் நான் பெற்றது வெறும் தூறல்தான் என்பதை அறிந்தேன். 1924ல் மூணாறு மலைப்பகுதியில் ஒரு பெருமழை பெய்தது. 6000 அடி உயர மலைப்பகுதியில் மூன்று வாரங்கள் விடாது தொடர்ச்சியாக பெய்தது அந்த தேவமழை. முன்னெப்போதும் இல்லாத அந்த மழையில் மூணாறு ஊரின் சாத்தியமான வடிகால் பகுதிகளில் உருண்டு வந்த பாறைகளும் மரப் பொருக்களின் குவியலால் அடைக்கப்பட்டு ஊரே வெள்ளக்காடானது.பிரிட்டிஷ் அமைத்த இருப்புப் பாதை, அணைக் கட்டும், மின்ஆலையும் , முன்னர் இருந்த நீர்தேக்கங்களும் அடித்து செல்லப்பட்டது. குறு ஆறுகள் திசைமாறின. மழைக்கு கிழக்குபுறமாக இருக்கும் வீரபாண்டியிலும், குச்சனூர் ஆற்றிலும், மேலமங்கலத்திலும் நீரோட்டத்தின் திசை மாறுவதற்கு இந்த பெருமழை காரணமாக இருந்திருக்கலாம்.
பருவமழைக்கு சாதகமான இயற்கையும், எண்ணற்ற வளங்களும், வாழ்வின் கடைசி துளியினையும் அர்பணித்து, காலம்காலமாக பண்பாட்டை பேணி, மரபான ஞானத்தை தேர்ந்த அடுத்த வழித்தோன்றலுக்கு கடத்தும் முன்னோடிகளின் அர்பணிப்பால் வரலாற்று கலைச் செல்வங்களும் நிரம்பியிருக்கும் நமது நாட்டில் அடுத்த பெருமழை எப்போது எங்கிருந்து வேண்டுமானாலும் பெய்யலாம், அதனை கொள்வதற்கு தேவையான நாவல் என்னும் கொள்ளிடத்தை, அலகலகாக பகுத்து மொத்த உலகிற்கும் கொள்கலனில் ஞானப் பண்டமாற்றம் செய்ய இயற்கையின் கொடையாக நாம் பெற்ற துறைமுகம் என்கிற மொழியில் விவாதித்து விரிவாக்கி கட்டமைப்பதே நமது கடமை.
***