நட்பு-ஒரு விளக்கம்

“பல நண்பர்கள் அவர்களின் பலவகையான நட்புக்கோரல் அழைப்புகளை எனக்கனுப்புகிறார்கள். அவற்றை அப்படியே நான் அழித்துவிடுகிறேன். மேலும் அப்படி ஒரு அழைப்பை அனுப்பிய நண்பரின் எண்ணும் என்னுடைய மின்னஞ்சல் சல்லடையால் தடுக்கப்பட்டு விடும். பின்னர் அவர் எனக்கு எந்த மின்னஞ்சலும் அனுப்ப முடியாது. கிட்டத்தட்ட எழுநூறு மின்முகவரிகளையும் நாற்பத்தெட்டு சொற்களையும் முழுமையாகவே தடுத்திருக்கிறேன்.”

உங்கள் இணயம் சம்பந்தமான அறிவிப்பை எனக்கான பதிலாககொள்கிறேன். இந்த அறிவிப்பு ஒரே ஒரு நாள் முன்னதாக வந்திருந்தால் முந்தயகடிதத்தை அனுப்பி இருக்கமாட்டேன். இந்த கடிதத்தை உங்கள் மின்னஞ்சல் சல்லடை தடைசெய்யாமல் இருந்து இந்த கடிதத்தை பார்க்க நேர்ந்தால் தயவுசெய்து என்னை மன்னிக்கவும். I know my limits sir. I will not come beyond this.

With deep Love

Parthiban

அன்புள்ள பார்த்திபன்

நான் சொன்ன நட்பு கோரல் கடிதம் என்பது நீங்கள் எழுதியதல்ல. நான் என்றுமே நட்புகளை விரும்புபவன். பலநூறு நண்பர்கள் கொண்டவன். எந்நேரமும் பல நண்பர்கள் நடுவே இருப்பவன்

நான் சொன்னது சில ஆர்க்குட் போன்ற சமூகஇணையதளங்கள் வழியாக அனுப்பப்படும் நட்புகோரல்களை. அவற்றில் பங்கெடுப்பதற்கு எனக்கு நேரமில்லை. மேலும் அவற்றில் உண்மையான மனிதர்கள் இல்லை. எனக்கு நிழலுருக்களுடன் உரையாடுவதில் ஆர்வமும் இல்லை

நீங்கள் எழுதிய கடிதத்துக்கு பதில் எழுத வழக்கமான தாமதம். சென்னைக்கு 3 அன்று மாலை வருவேன். ராஜகோபாலன் இல்லத்தில் தங்குவேன். அவர் சைவச்சப்பாடு போடுவார், முடிந்தால் அங்கே பார்ப்போம்

ஜெ

முந்தைய கட்டுரைவிஷ்ணுபுரம் விருது விழா
அடுத்த கட்டுரைமாவோயிசம் கடிதங்கள்