பாலமுருகனுக்கு வாழ்த்துக்கள்

2007 ஆம் ஆண்டு ஆஸ்ட்ரோ வானவில்லும் மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கமும் இணைந்து நடத்திய தமிழ் நாவல் எழுதும் போட்டியில் முதல் பரிசை வென்ற கே.பாலமுருகனின் நாவலான ” நகர்ந்துகொண்டிருக்கும் வாசல்கள்” 2009க்கான தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழகத்தின்(சிங்கப்பீர் முஸ்தபா அறக்கட்டளை) கரிகாற்சோழன் விருதைப் பெற்றுள்ளது.

பரிசளிப்பு விழா வருகின்ற 1.01.2011 ஆம் தேதி மாலை மணி 6.00க்கு சிங்கப்பூரில் நடைப்பெறவுள்ளது.

http://bala-balamurugan.blogspot.com/2010/12/blog-post_25.html

பாலமுருகன் மலேசியாவில் எழுத ஆரம்பித்திருக்கும் இளம்தலைமுறை எழுத்தாளர்களில் குறிப்பிடத்தக்கவர். அனங்கம் என்ற சிற்றிதழை நடத்துபவர். பாலமுருகனுக்கு வாழ்த்துக்கள்

முந்தைய கட்டுரைஅங்காடித்தெருவுக்கு விருது
அடுத்த கட்டுரைவிஷ்ணுபுரம் விருது விழா