ராஜராஜ கோலான்

இனிய ஜெயம்

தி லாஸ்ட் ஹிஸ்டரி என்றொரு சானல் ”ஆதாரபூர்வமான” வரலாற்று ஆய்வுக்கே வராத ”மறைந்து ”போன வரலாறை உலகெங்கும் இருந்து ”கண்டுபிடித்து ”இந்த சேனல் முன்வைக்கிறது .

சர்வாங்கமும் முட்டாள்தனத்தால் நிறைந்த ஒன்றைக்கூட ஆங்கிலம் வழியே கேட்கும்போது லைட்டாக புல்லரிப்பு ஏற்படத்தான் செய்கிறது .

அசோகர் ஏற்படுத்திய நவ அறிஞர் எனும் இன்று வரை அறுபடாமல் தொடரும் அந்த அமைப்பை பற்றி உங்களுக்கு தெரியுமா ? இதோ அதன் ”ஆதாரபூர்வமான ”வரலாறு .அநேகமாக ஆசிரியர் அம்பேத்கார் இந்த ஒன்பது பேரில் ஒருவர் என நினைக்கிறேன் : }

https://www.youtube.com/watch?v=sObKax9iLec

தஞ்சை பெரிய கோவில் விமானம் குறித்த ”மர்மம் ” ஒரு வீடியோவில் ஆசார்யமாக பார்க்க படுகிறது .

இதை கட்டிய ராஜ ராஜ கோலான் குறித்து நரேட்டர் வியக்கும் இடம் எனக்கு மிக பிடித்த ஒன்று .

இந்தனை ”புதைக்கப்பட்ட ”வரலாறு கொண்ட புதை மேடா நமது பூமி . .

கடலூர் சீனு

***

அன்புள்ள சீனு

இதெல்லாம் ஜுஜுபி. நீங்கள் பழைய தியசொஃபிகல் சொசைட்டியினரின் எழுத்துக்களை வாசிக்கவேண்டும். தூய மெய்ஞானத்தால் மறைந்த நிலங்களை கண்டடைகிறார்கள். சித்தர்களை திரும்பக்கொண்டுவருகிறார்கள். அந்த ஞானதரிசனங்களின் அடிப்படையில்தான் இங்கே லெமூரியா என்ற கருத்தே உருவாக்கப்பட்டு அரசியலால் நிலைநிறுத்தப்பட்டுள்ளது.

இதேபோல எகிப்து, பாலஸ்தீனம் பற்றியெல்லாம் நம்மால் எண்ணவே முடியாத அளவுக்குச் சென்றிருக்கிறார்கள். பறக்கும்தட்டுகள், விண்ணுயிரிகள் எல்லாம் ‘வேறே லெவெல்’

ஜெ

முந்தைய கட்டுரையானை டாக்டர் பாடத்தில்
அடுத்த கட்டுரை“ஞானமும் சன்னதமும்’  – லக்ஷ்மி மணிவண்ணன்