ஈசன், ஒரு குத்துப்பாட்டு

ஜேம்ஸ் வசந்தன் இசையமைக்க மோகன்ராஜன் எழுதி தஞ்சை செல்வி பாடிய இந்த பாட்டு ஈசன் படத்தில் இருக்கிறது. ஒரு நண்பர் அனுப்பிவைத்த தொடுப்பு. நண்பர் நாட்டுப்புற இசையில் தீவிரமான ஆர்வம் உள்ளவர்.

எனக்கும் மிகவும் மனதைக்கவர்ந்தது இப்பாடல். இதன் குரல் அசலான நாட்டுப்புறத்தன்மை கொண்டது. இசை வழக்கமான தெம்மாங்காக இருந்தாலும் தாளம் துடிப்பாக இருக்கிறது.

படமாக்கிய விதத்தில் அந்த பெண்மணியின் முகத்தேர்வும் அவர் இயல்பாக பாடி ஆடும் விதமும் சிறப்பு. ஒரு துளி சினிமா. ஆனால் அதில் அசலான ஒரு துக்கம் இருக்கிறது

http://www.youtube.com/watch?v=gXET9AVxKd4

முந்தைய கட்டுரைவிஷ்ணுபுரம் இலக்கிய விருது கடிதங்கள்
அடுத்த கட்டுரைராஜாஜி,மபொசி_ கடிதங்கள்