ரகசியப்பேய் -கடிதங்கள்

kupara[6]

ரகசியப்பேய்

அன்புள்ள ஜெயமோகன்,

 

ரகசியப் பேய் படித்தேன்.

 

கு.ப.ராவின் ஆற்றாமை, சிறிது வெளிச்சம், கனகாம்பரம் மூன்று கதைகளும் நெருங்கிய தொடர்புடையவை. இம்மூன்றிலும் ஆண் பெண் உறவின் சிக்கலான பிரச்சினைகளை, குறிப்பாக ஆண் பெண் பாலியல் பிரச்சினைகளை நுட்பமாகச் சொல்லியுள்ளார் கு.ப.ரா.

 

அது வெறும் பாலியில் சார்ந்த சிக்கல்களை பின்னனியாகக் கொண்ட படைப்புகள் மட்டுமல்ல, அதற்கும் அப்பால் அவை சார்ந்து எழும் உளவியல் சிக்கல்களைக் குறித்த கதைகள். அவை எழுதப்பட்ட காலத்தில் கண்டணத்துக்கும் நிந்தனைக்கும் உள்ளானவை. அவரின் எல்லா கதைகளின் அடிநாதமாக இருப்பது இதுவே. இதைப்பற்றி, ”செக்ஸ் என்பது பெண்ணின் அந்தரங்க உறுப்புகள் சம்பந்தப்பட்ட விஷயம் மட்டும் அல்ல. அது மானிட உணர்ச்சியின் அடிப்படை அம்சம்; மனக்கடலின் ஆழத்தில்-அடித்தளத்தில் பொதிந்து கிடக்கும் முதல் உணர்ச்சி” என்று சொல்கிறார் அவர்.

 

http://kesavamanitp.blogspot.in/2013/07/blog-post.html

 

அன்புடன்,

கேசவமணி

 

அன்புள்ள ஜெ.,

 

தரவுகளுக்கு மன்னிக்கவும்.. சென்சஸ் கணக்குப்படி, 1901ல் இருந்தே பெண்களின் எண்ணிக்கை ஆண்களைவிடக் குறைவுதான்..

 

ஆயினும் வரதட்சிணை உட்படப் பல விஷயஙகளிலும் நீங்கள் சொன்னமாற்றம் கண்கூடானது.. ஒருவேளை இதற்கு ஆண்களின் பலதாரமணம் காரணமாயிருக்குமோ ??

 

நன்றி

ரத்தன்

முந்தைய கட்டுரைவாசல்பூதம்
அடுத்த கட்டுரைசிற்பக்கலை அறிய…