ஆகிய ஆறு தரிசனங்களின் அடிப்படைக் கூறுகளும் அவை பிற்கால இந்துத் தத்துவ மரபுக்கு எப்படி கால்கோளாயின என்றும் மிகத் தெளிவாக உரையாடப்பட்டுள்ளது. இது தவிர அவைதீக மதங்களான பௌத்தம், சமணம் பற்றியும் அவற்றை வைதீக மதங்கள் வன்முறை ரீதியில் ஒடுக்கியதற்கான ஆதாரங்கள் பொய்யானவை என்றும் மிகத் தெளிவாக விவாதிக்கப்படுகிறது. அவைதீக மதங்களின் வீழ்ச்சிக்கு வேதாந்தியான சங்கரரின் அத்வைதமே உதவியது என்பது ஜெயமோகனின் வாதம். உண்மையில் எந்த மதங்களையும் வன்முறை ரீதியில் துடைத்தழிக்க முடியாது. அதனைத் தத்துவார்த்த ரீதியில் எதிர்கொள்ளவே வேதாந்தங்கள் தோற்றம் பெற்றன.
இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள் ஒரு பார்வை -சுயாந்தன்
========================
இந்துஞானமரபில் ஆறுதரிசனங்கள் -கடிதம்
அஞ்ஞானமும் ஒளிச்சுடரும் (இந்து ஞானமரபில் ஆறு தரிசனங்கள் – ஜெயமோகனுடைய கட்டுரைநூல் அறிமுகம் )