முற்போக்கான எண்ணங்களும் இடதுசாரிச்சிந்தனைகளும் கொண்டிருந்த லெஸ்டர், சிறந்த இலக்கியவாசகராகவும் திகழ்ந்தார். இலங்கைச்சிங்கள மக்களின் இயல்புகள், கலாசாரம், நம்பிக்கைகள், நாகரீகம் என்பனவற்றை யதார்த்தமாக பிரதிபலித்த சிங்கள படைப்புகளை (நாவல், சிறுகதை) திரைப்படமாக்குவதில் ஆர்வம்கொண்டிருந்தவர்.
அதனால், மார்ட்டின் விக்கிரமசிங்கா (கம்பெரலிய, மடோல்தூவ, யுகாந்தய) , மடவள எஸ். ரத்நாயக்க (அக்கர பஹ) கருணாசேன ஜயலத் ( கொளு ஹதவத்த) ஜீ.பி. சேனாநாயக்கா ( நிதானய) முதலான படங்களை தமிழ் எழுத்தாளர்களும் விரும்பிப்பார்த்தனர். அவை பற்றிய விமர்சனங்களையும் எழுதினர்.