வணக்கம் திரு ஜெயமோகன்
டெர்ரென்ஸ் மாலிக்கின் Tree of Life படத்தை நீங்கள் ரசித்தீர்கள் என்று முன்பு கூறியிருந்தமையால் இந்த கடிதம்.
மாலிக்கின் Voyage of Time நான் சமீபத்தில் விரும்பி பார்த்த ஆவண படம். இந்த படத்தை நீங்களும் பார்த்திருப்பீர்கள் என நினைக்கிறேன். இல்லையேல் நிச்சயம் பார்க்கவும்.
கொற்றவையின் முதல் பகுதியை படிக்கையில் என்ன உணர்ச்சிகள் வந்தனவோ அதே எழுச்சியை இந்த படத்தின் முதல் காட்சிகளில் அடைந்தேன். கொற்றவையில் சொற்களால் அடைந்த அனுபவத்தை காட்சியின் மூலமும் இசையின் மூலமும் இப்படத்தில் அடைந்தேன்.
படத்தை பற்றிய என் எண்ணங்கள் இங்கே https://ramblingering. wordpress.com/2018/04/29/ voyage-of-time/
ஸ்ரீராம்