குற்றவாளிகளின் காவல்தெய்வம் கடிதம்

Cartoon-justice-scales

குற்றவாளிகளின் காவல்தெய்வம்

குற்றவாளிகளின் காவல் தெய்வம்-கடிதங்கள்

அன்புள்ள எழுத்தாளர் அவர்களுக்கு,

வணக்கம்.

நான் தங்கள் எழுத்தை கடந்த நான்கு வருடங்களாக வாசித்து வருகிறேன்.

விஷ்ணுபுரம் , இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள் , இந்திய ஞானம் , இந்தியப் பயணம், அருகர்களின் பாதை, நவீன தமிழிலக்கிய அறிமுகம் , பின் தொடரும் நிழலின் குரல் , உலோகம், இரவு, அனல் காற்று, ஊமைச்செந்நாய், ஈராறு கால்கொண்டு எழும் புரவி, கன்னி நிலம் , அறம் சிறுகதைகள், அறிவியல் சிறுகதைகள் மற்றும் உங்கள் தளத்தில் வாசிக்கக் கிடைக்கும் சிறுகதைகள், கட்டுரைகள், வாசகர் கடிதங்களுக்கான தங்களது பதில்கள் போன்றவற்றை விரும்பி வாசித்து தங்களிடமிருந்து நிறைய பெற்றுக்கொண்டிருக்கிறேன். வெண்முரசு வாசிப்பில் முதற்கனலில் ஆரம்பித்து இந்திர நீலத்திலேயே இன்னும் நின்று கொண்டிருக்கிறேன்.

தங்களது சமீபத்திய கட்டுரையான “குற்றவாளிகளின் காவல் தெய்வம்” வாசித்து மிகவும் மனம் உடைந்து விட்டேன். என் பல வருட உழைப்பில் நான் கட்டிய வீட்டை என் விருப்பத்திற்கு எதிராக என்  உறவினர்கள் ஆக்கிரமித்துக் கொண்டார்கள். நீதிமன்றத்தில் வாய்தா மேல் வாய்தா போட்டு இழுத்தடிக்கிறார்கள். ஆக்கிரமிப்பார்கள் அறமே இல்லாமல் நடந்து கொள்கிறார்கள். இரத்தக்காயம் இல்லாத எந்த வழக்குக்கும் முக்கியத்துவம் கொடுக்க முடியாது என்று காவல் துறையினர் பகிரங்கமாகவே சொல்கிறார்கள்.

தமிழ்த்தாயோ பாரதத்தாயோ காப்பாற்றுவார்கள் என்ற நம்பிக்கையை கொஞ்சம் கொஞ்சமாக இழந்துவிட்டு, நீதி தேவதையின் கண்கள் திறப்பதற்காகக் காத்துக் கொண்டிருக்கிறேன். ஏனென்றால் தமிழ்த்தாயையும் பாரதத்தாயையும் அரசியல்படுத்தி விட்டார்கள். இன்றைய தேதிக்கு நீதி தேவதை மட்டுமே நம்பத் தகுந்தவள் என்று தோன்றுகிறது. புலம்பல்களுக்காக என்னை மன்னித்து விடுங்கள்.

வணக்கம்.

க.மூர்த்தி.

 

அன்புள்ள மூர்த்தி அவர்களுக்கு,

 

என்ன சொல்ல. இங்குள்ள நீதிமுறை பிரிட்டிஷ் காலம் முதலே நீதியை தாமதிப்பதற்கும் தவிர்ப்பதற்குமான ஒன்றாகவே இருந்துள்ளது. நீதிமன்றச்சுமை இருபக்கமும்தான் என்பதனால் காலப்போக்கில் நீதி என ஒரு சமரசம் நிகழும் என எதிர்பார்ப்பதன்றி ஒன்றும் செய்வதற்கில்லை

 

ஜெ

முந்தைய கட்டுரைசவரக்கத்தி மேல் நடை -கடிதங்கள்
அடுத்த கட்டுரைசெய்திதுறத்தல்