அன்புள்ள ஜெயமோகன்,
தஸ்தாயெவ்ஸ்கியின் “அசடன்” நாவலை கடந்த ஓராண்டாகவே தேடிக் கொண்டிருக்கிறேன். சென்னைப் புத்தகக் காட்சியில் கிடைக்கும் என எதிர்ப்பார்ப்புடன் இருந்தேன். அங்கும் கிடைக்கவில்லை. இரண்டு நாட்களுக்கு முன்னர் சென்னை நியூ புக்லேண்ட்ஸ் கடையிலும், டிஸ்கவரி வேடியப்பன் அவர்களிடமும் கேட்டுப் பார்த்தாயிற்று. நூல் அச்சில் இல்லை என்று சொல்லப்பட்டது. உங்கள் தளத்தில் “அசடன் வாங்க” என்ற சுட்டி டிஸ்கவரி தளத்திற்கு இட்டுச் செல்கிறது. அதிலும் நூல் இருப்பில் இல்லை என்ற தகவல்தான் கிடைக்கிறது.
எம்.ஏ. சுசீலா அவர்களை கவுரவித்து விழா எடுக்கும் இவ்வேளையில் அவர் மொழிபெயர்த்த முக்கியமான ஒரு நூல் பரவலாகக் கிடைக்காதது வருத்தமளிக்கிறது.
மிக்க அன்புடன்,
கணேஷ்பாபு
***
அன்புள்ள கணேஷ்
அசடன் முதல்பதிப்பை பாரதி புத்தகாலயம் வெளியிட்டது. இப்போது பிரதிகள் இல்லை. மறுபதிப்பை நற்றிணை வெளியிடுகிறது. ஆகஸ்டில் வெளிவந்துவிடும் என்று சொன்னார்கள். குற்றமும் தண்டனையும், நிலவறைக்குறிப்புகள், தஸ்தயேவ்ஸ்கி கதைகள் ஆகியவை இப்போது கிடைக்கின்றன. நற்றிணை பிரசுரம்
ஜெ
***