இதுவரை இலங்கை சென்றதில்லை. பல்வேறு சிறு சிக்கல்கள் இருந்தன. சிலமுறை திட்டமிட்டுத் தள்ளிப்போயிற்று. சென்ற ஆண்டு சென்றிருக்கவேண்டியது.
மலேசிய எழுத்தாளர் ம.நவீன் இலங்கை சென்று வந்த அனுபவக்குறிப்புகளை வாசித்தேன். ஓர் உறுதியான முடிவுக்கு வந்தேன், இலங்கை சென்றால்கூட அது தனிப்பட்ட நண்பர்களைச் சந்திப்பது, சுற்றுலா என்றிருக்கவேண்டுமே ஒழிய இலக்கியக்கூட்டம், வாசகர்சந்திப்பு எதற்கும் ஒப்புக்கொள்ளக்கூடாது. அங்கே இலக்கியவாசகர் என எவரேனும் இருக்கிறார்களா என்ற ஐயத்தையே நவீன் குறிப்பு உருவாக்குகிறது.
தன் வழக்கப்படி ‘போட்டு உடைக்கும்’ பாணியில் எழுதியிருக்கிறார் நவீன். சில்லறை வம்புகள், அரசியல்சழக்குகளுக்கு அப்பால் நூல்களைப்பற்றிய விவாதமோ, பொருட்படுத்தத் தக்க கருத்துக்களோ இல்லாமல் நீண்ட சுற்றுலாமுழுக்க பலரைச் சந்தித்து மீண்டிருக்கிறார் என்ற எண்ணம் எழுந்தது
உதிரக் கள்: இலங்கைப்பயண அனுபவங்கள்