வெண்முரசு ஒலிவடிவம்

KIRATHAM_EPI_64

அன்புள்ள ஆசிரியருக்கு…
தமிழ் மேல் உள்ள ஆர்வத்தின் காரணமாகவும் மகாபாரதக் கதை மேலான விருப்பின் பாலும் உடல் அழிந்த பின்னும் குரல் இருக்கும் என்ற சுயநலத்தின் மேலும் வெண்முரசு நாவலை ஒலிநூலாக்குகிறேன் என்று சொன்னேன்.
சுழன்றடிக்கும் வாழ்வின் கரங்களுக்கிடையில் பிடித்துக் கொள்ளக் கிடைத்த சில நுனிகளில் இப்பணியும் ஒன்றாகி இருக்கின்றது. வரிசையாக இல்லாமல் கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்த்துக் கொண்டிருக்கிறேன். கிடைத்த வசதிகளைக் கொண்டு, வாய்த்த நேரங்களில், பின்னொலிக்கும் இடைஞ்சல்களோடு படித்துப் பதிவு செய்து கொண்டிருக்கிறேன்.
மேற்கொள்ளும் எந்தவொரு செயலையும் போல இப்பணியில் ஈடுபடுவது முதலில் என்னை என் முடிதல்களை என் எல்லைகளை எனக்கே காட்டுகின்றது. நீங்கள் ஒருமுறை சொன்னது போல், தீவிரமாக ஈடுபடும் எந்த செயலும் மற்ற பணிகளைப்  பாதிக்காது. அந்தபணிகளையும் இந்நெருப்பு பற்றிக் கொண்டிருக்கின்றது. அதை உணரவும் முடிகின்றது.
கண்ணி:
நன்றிகள்.
இரா.வசந்த குமார்.
முந்தைய கட்டுரைவெண்முரசு–நூல் பதினேழு-‘இமைக்கணம்’-3
அடுத்த கட்டுரைதெய்வங்கள் பேய்கள் தேவர்கள்