டாக்டர் அம்பேத்கார் பற்றி இந்திய அரசின் நிதி உதவியுடன் ஜப்பார் பட்டேல் எடுத்த திரைப்படம் வெளியாகியிருக்கிறது. இப்படம் காந்தியைக் கிட்டத்தட்ட தலித்துக்களின் எதிரி என்று, பொய்யான தகவல்களின் அடிப்படையில், வெறுப்பு உமிழும் கோணத்தில் சித்தரிக்கிறது என்றார்கள். சாவித்ரி கண்ணன் ஒரு கட்டுரையில் இதை விவாதிக்கிறார்.
பார்க்க டாக்டர் பாபா சாகேப் அம்பேத்கார் திரைப்படம்
ஏற்கனவே பகத்சிங் பற்றி வெளிவந்த திரைப்படம் ஒன்று காந்தியைப்பற்றி மிக எதிர்மறையாகச் சித்தரித்தது. காந்தி பகத்சிங்கைக் காப்பாற்ற எதுவுமே செய்யவில்லை என்றும் மாறாக பகத் சிங்க் தூக்கிலேற்றப்பட மௌன அனுமதி அளித்தார் என்றும் அது காட்டியது. அந்தக் கூற்று முற்றிலும் பொய்யானது என்று மிக விரிவான ஆவணங்களுடன் நிரூபிக்கப்பட்ட பின்னரும் இன்றும் பொதுவான வாசிப்பில்லாதவர்கள் அந்த படத்தின் கோணத்தையே முன்வைத்து பேசிவருகிறார்கள்
பூனா ஒப்பந்தம் பற்றி மிகப்பிழையான , உள்நோக்கம் கொண்ட , ஒரு தரப்பை இந்த படம் பதிவுசெய்கிறது. இந்தத் தரப்பு பாமரர் மத்தியில் நிலைபெறலாம். இதை மறைக்க எத்தனை நூறு பக்கங்கள் ஆதாரங்கள் அளிக்கப்பட்டாலும் போதாது
முஸ்லீம் மதவாதம் பற்றிய அம்பேத்காரின் கருத்துக்கள் இந்தப்படத்தில் மறைக்கப்பட்டு போலியான ஒரு சித்திரமும் அளிக்கப்பட்டிருக்கிறது ஜப்பார் பட்டேலின் மதவெறி நோக்குக்கு அம்பேத்கார் போன்ற தேசியசிற்பிகள் பலியாவது மிகமிக துரதிருஷ்டவசமானது.
பழைய கட்டுரைகள்
காந்தியும் தலித் அரசியலும் 1
காந்தியும் தலித் அரசியலும் 2
காந்தியும் தலித் அரசியலும் 3
காந்தியும் தலித் அரசியலும்