பத்ம விருதுகள் -கடிதங்கள்

ராஜகோபாலன் வாசுதேவன்
ராஜகோபாலன் வாசுதேவன்

 

இளையராஜா, ரோமுலஸ் விட்டேகர் – பத்ம விருதுகள்

அன்புள்ள ஜெ.,

 

இந்த வருட பத்ம விருதுகளில் எனக்கு ஒரு இன்ப அதிர்ச்சி.. என் கல்லுரிப் பேராசிரியர் திரு. வாசுதேவனுக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்படுகிறது.. பிளாஸ்டிக்-ஐ பயன்படுத்தி சாலைகள் போடும் தொழில்நுட்பத்திற்காக இது வழங்கப்படுகிறது..

 

விருத்தைக் காட்டிலும், நம் அரசாங்கம், இந்தத் தொழில்நுட்பத்தை முனைப்பாக செயல்படுத்தினால் தூய்மை இந்தியா திடடத்திற்கு சரியான பாதையாக அமையும்..

 

நன்றி

ரத்தன்

 

அன்புள்ள ஜெ

 

ரோமுலஸ் விட்டேகரை இந்த விருதின் வழியாகவே நான் அறிந்துகொண்டேன். உங்கள் இணையதளத்தில் கடலூர் சீனு எழுதிய நூல்மதிப்புரையையும் வாசித்தேன். பெருவாழ்வு என்று சொல்லவேண்டும். வணங்குகிறேன்

 

நெல்சன் ,குமரி

 

அன்புள்ள ஜெ

 

இளையராஜாவுக்கு அளிக்கப்பட்டுள்ள பத்மவிபூஷன் விருது வெறுமே இசைக்கு மட்டும் அளிக்கப்படுவது அல்ல. இசை முக்கியமானதுதான். இசையை ஒரு பாதையாகக் கொண்டு அவர் சென்ற தொலைவுதான் மேலும் முக்கியமானது என நினைக்கிறேன்.

 

செல்வ கணேசன்

முந்தைய கட்டுரைநாகர்கோயிலில் புத்தகக் கண்காட்சி
அடுத்த கட்டுரைதமிழில் அரசியல்படங்கள்