இளையராஜா, ரோமுலஸ் விட்டேகர் – பத்ம விருதுகள்

ilayaraja01

இவ்வாண்டுக்கான பத்மவிபூஷண் விருது இளையராஜா அவர்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது. அனைத்துவகையிலும் மகிழ்ச்சிக்கும் பெருமைக்கும் உரியது இது. இளையராஜா தமிழ்மக்களால் ஏற்கப்பட்டு ஒரு தலைமுறை கடந்துவிட்டது. இது அவரை தேசம் தன் தலைமக்களில் ஒருவராக ஏற்றுக்கொள்ளும் தருணம்.

 

ராஜா எனக்கு ஓர் இசையமைப்பாளர் மட்டும் அல்ல. இன்றிருப்பவர்களில். படைப்பூக்கத்தின் பொருட்டு நான் நிமிர்ந்து ஆசிரியரென நோக்கத்தக்க ஒரே ஆளுமை. நம் மரபின் பெருவெளியிலிருந்து தனக்குரிய மெய்மையை எடுத்துக்கொண்ட நல்லாசிரியன். கலையே மெய்யுசாவும் வழியுமாகும் என காட்டும் ஞானி. நம் காலகட்டத்தின் காலம் கடந்த முதன்மை அடையாளம்.

 

இளையராஜா அவர்களுக்கு என் பணிந்த வணக்கம்

 

romu

நான் மதிக்கும் கானுயிர் நிபுணரான ரோமுலஸ் விடேகர் அவர்களுக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டிருப்பதும் இத்தருணத்தில் நிறைவளிக்கிறது. அவருடைய சாதனைகளுக்கு முன்னரே இவ்விருது அளிக்கப்பட்டிருக்கும் என நினைத்தேன்.

 

கானுயிர்களுடன் இணைந்த வாழ்க்கைய ஒரு தவமெனக் கொண்டவர் விட்டேகர். நாகங்களின் முதலைகளின் தோழர். நம் காலகட்டத்தில் வாழும் வேதரிஷி என சிலசமயம் அவரை நான் எண்ணிக்கொள்வதுண்டு. ரோமுலஸ் விட்டேகர் அவர்களுக்கு வணக்கம்

 

 

 

இளையராஜாவின் இசை,கடிதம்

ராஜாவின் எதிரிகள்

ராஜாவும் இதழாளர்களும்

இளையராஜா

வெண்முரசு- இளையராஜா வாழ்த்து

மிகையாகப் போற்றப்படுகிறாரா இளையராஜா?

இளையராஜா, இ.பா, ஏ.ஆர்.ரஹ்மான்

ராஜாவுக்கு விருது

 

==================================================================================================

 

எனது கணவனும் ஏனைய விலங்குகளும்

மழைக்கோதை

முந்தைய கட்டுரைவானம்
அடுத்த கட்டுரைவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–42