பாலஸ்தீன ஆதரவுக்குழுவில் உள்ள இந்தியர்களை உள்ளே அனுமதிக்கமுடியாது என்று பாகிஸ்தான் சொன்னதை ஒட்டி எழுந்த சிக்கல்களைக் களைந்து குழு பாகிஸ்தானுக்குள் நுழைந்து சென்றுகொண்டிருக்கிறது என அ.முத்துகிருஷ்ணன் அனுப்பிய மின்கடிதத்தில் சொல்கிறார். அவர் கடந்துசெல்லும் இந்த நிலம் மொத்தமாகவே நமக்கு அறிமுகமில்லாதது. பயணிகள் அதிகம் செல்லாதது. அவரது பயண அனுபவங்களைச் சுடச்சுட ஏதேனும் இதழ் வெளியிடுமென்றால் சிறப்பாக இருக்கும்.