எட்டு பேர் காகிதங்களுக்கும் மேசை நாற்காலிகளுக்கும் இடையே மனிதர்களும் சிலர் உலாவிய அந்த சிறிய அறைக்கு வெளியே அமர்ந்து கொண்டும் நின்று கொண்டும் நடந்து கொண்டும் காத்திருந்தோம். பத்து மணிக்கு முன்னதாக மெலிந்து சிவந்த உயரமான பெண் ஒருத்தி வலக்கையின் விரல்கள் மதிய உணவிற்கான பையையும் இடக்கையின் தோள் மற்றொரு பையையும் பிடித்திருக்க எங்களை நோக்கிப் பதற்றத்துடன் வந்து கொண்டிருந்தாள். இடைநாழியில் தூரத்தில் இருந்தே மாவட்ட ஆட்சியரின் அறையும் அதையடுத்த ஆதிதிராவிட நலத்துறை அலுவலரின் அறையும் சாத்தியிருப்பதை உறுதி செய்து கொண்ட பின் ஆசுவாசம் கொண்டவளாய் நடையில் துள்ளல் தெரிய ஆதிதிராவிட நலத்துறை அலுவலரின் அறைக்கு எதிரே இருந்த சிறிய அறையில் போய் அமர்ந்தாள்.
சுரேஷ் பிரதீப் எழுதிய எஞ்சும் சொற்கள்
================================================================
முந்தைய கதைகள்
சிறுகதை 6 , இருகோப்பைகள்- கார்த்திக் பாலசுப்ரமணியம்
சிறுகதை 5 , லீலாவதி -பிரபு மயிலாடுதுறை
சிறுகதை 4 , சிறகதிர்வு – சுசித்ரா
சிறுகதை -2, ’பேசும்பூனை’-சுனில் கிருஷ்ணன்
சிறுகதை -1 போயாக்- ம.நவீன்