விஷ்ணுபுரம் விருதுவிழா அழைப்பிதழ்

1

சீ.முத்துசாமி தமிழ் விக்கி

2017 ஆம் ஆண்டுக்கான விஷ்ணுபுரம் விருது மலேசியாவின் மூத்த எழுத்தாளரான சீ.முத்துசாமிக்கு வழங்கப்படுகிறது.

 

கோவையில் டிசம்பர் 16,17 ஆம் தேதிகளில் விஷ்ணுபுரம் விருது வழங்கும் விழாவும் வாசகர்கூடலும் நிகழவிருக்கிறது

 

 இடம் ராஜஸ்தானி சங் அரங்கம் ஆர் எஸ் புரம் கோவை

 

16 ஆம்தேதி காலை ஒன்பது மணிக்கு சந்திப்புகள் தொடங்கும். இரவு பதினொரு மணிவரை எழுத்தாளர்களுடன் உரையாடல்கள் நிகழும். 17 ஆம்தேதி காலை 9 மணிக்கு மீண்டும் தொடங்கி மாலை நான்குமணிக்கு முடிவடையும். மாலை ஆறுமணிக்கு பொது நிகழ்ச்சியில் விருது வழங்கப்படும்

 

இலக்கியம் மீது ஆர்வம் கொண்ட வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம். வெளியூர்களில் இருந்து வரும் வாசகர்கள் தங்குவதற்கு இடமும்  அனைவருக்கும் உணவும்   ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வருபவர்கள் முன்னரே தங்கள் வருகையை கீழ்கண்ட படிவத்தில் பதிவுசெய்து கொண்டால் எத்தனைபேர் தங்குவதற்கு ஏற்பாடு செய்யவேண்டும் என்பதை எங்களால் ஓரளவு கணிக்கமுடியும். அல்லது [email protected] என்னும் மின்னஞ்சலுக்குத் தெரியப்படுத்தவும்

விஷ்ணுபுரம் விழா தங்குமிடம் விண்ணப்ப படிவம்
இளம் எழுத்தாளர்கள் மூத்த எழுத்தாளர்களைக் கண்டு உரையாடுவதற்கான அரங்காக இருநாள் நிகழ்ச்சிகள் இருக்கும்.

 

2

அழைப்பிதழ்

 

சிறப்பு விருந்தினர்கள்

 

எழுத்தாளர் பி.ஏ.கிருஷ்ணன்

மேகாலய எழுத்தாளர் ஜனிஸ் பரியத்

பேச்சாளர்கள்

ராஜகோபாலன். ம.நவீன், ஜெயமோகன்

ஏற்புரை

சீ.முத்துசாமி

 

விழாவில் சீ முத்துசாமி குறித்த ஆவணப்படமும், அவரது படைப்புகள் பற்றிய விமர்சன நூலும் வெளியிடப்படும்

 

 

விஷ்ணுபுரம் விழா நிதியுதவி தொடர்புகளுக்கு

முந்தைய கட்டுரைவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 78
அடுத்த கட்டுரைஇரு கடிதங்கள்