ஆ! கவிதை!

அன்புள்ள ஜெ,

மோடிஜி கவிதைகளை வாசித்தீர்களா? உங்கள் இலக்கியக்கருத்து என்ன என்று அறிய விரும்புகிறேன்.

பிரபாகர்

***

அன்புள்ள பிரபாகர்,

அப்துல் கலாம் கவிதைகளை வாசித்தபோது, மு.க கவிதைகள் எவ்வளவோ பரவாயில்லை என எண்ணினேன். இவர் அப்துல் கலாம் நல்ல கவிஞரோ என எண்ண வைக்கிறார். நான் கல்வித்தந்தைகள் சிலரின் சொற்பொழிவுகளைப் பார்த்திருப்பதனால் தாங்கிக்கொண்டேன்.

ஆனால் நாடு இருக்கிற இருப்பில் பெட்ரோல் பங்கில் எல்லாம் ஆளுயர தட்டியில் காஷ்மீர் முதல் கன்யாகுமரி வரை எழுதி வைத்துவிடுவார்களோ என ஐயமாக இருக்கிறது அது ஒன்றுதான் சிக்கல்.

நிற்க மோடியின் உடல்மொழி , குறிப்பாக அடியிலிருந்து சுழற்றி கையை நீட்டி பேசுவது, மறைந்த மலையாள நடிகர் திலகன் போல இல்லையா? ”திலகணாணு பறயுந்நது” மாதிரித்தானே இவரும் பேசுகிறார்?

ஜெ

முந்தைய கட்டுரைவீரான் குட்டி கவிதைகள்
அடுத்த கட்டுரைவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 69