சோபியா -கடிதம்

sophia

 

வணக்கம் திரு ஜெயமோகன்

உங்கள்  கடும்  வேலைகளின்  நடுவே  இவ்வளவு  விரைவில்  பதில்  அனுப்புவீர்கள்  என நினைக்கவில்லை  அனுப்பியதில்   மிக்க  மகிழ்ச்சியே

கமல்  அவர்கள்  ஒரு  நேர்காணலில்  சொன்னது போல  புத்தகமும் இணையமும்  ஒருங்கே பெற்ற  இந்தகாலத்தில்  வாழும் நாங்கள்  பேறு  பெற்றவர்கள்  என்றே  சொல்லவேண்டும்  டால்ஸ்டாயின்  kreutzer sonata  வாசித்த  பிறகு  அடுத்த  நொடியே என்னால்  இணையத்தில்  அக்கதையில்  மைய்ய  சரடாகஓடும்  பீத்தோவனின்  இசையை  முழு வடிவில்  கேக்க முடிகிறது  போரும் அமைதியும்  வாசித்த பிறகு பிரம்மாண்டமாக  தயாரிக்கப்பட்ட பிபிசி யின்  அந்நாவலின் தழுவலாகிய  தொலைக்காட்சித்  தொடரை பார்க்க  முடிகிறது  நீங்கள் வளர்ந்த  காலத்தில்  இது  சாத்தியமாகியிருக்குமா  என  ஐயம கொள்கிறேன்

அனால்   இவ்வாறு   உடனுக்குடன்   தகவல்களை  அறிந்துகொண்டு  முன்னகர்ந்து  செல்வதில்  நீங்கள்  பல  இடங்களில் குறிப்பிட்டது  போல  மனனம்  ஸ்வா த்யாயம்  தியானம் போன்ற படிப்பு முறைகள்  செயல்படாது போகின்றன  என்றே தோன்றுகிறது  பெரும்பாலும்  நாவல்களை  மட்டுமே  வாசிப்பதால்  இவ்வகை  படிப்பு  தேவையற்றது  என்றும் எண்ணுகிறேன் ஒவ்வொரு நிலையிலும்  வாசகன்  அவனுக்கேற்ற  வாசிப்பு முறையை  கண்டடைகிறான்  என கொள்கிறேன். வெண்முரசிலுள்ள  தத்துவங்களைப்  புரிந்த கொள்ள  வ்யாஸப் பிரசாத்  அவர்களின்  வகுப்புகளை  உங்களின் மூலம் அறிந்து இலவசமாக  எதனை முறை  வேண்டுமானாலும்  பார்த்து  ஒவ்வொரு  முறையும்  ஒரு திறப்பை  பெறுகிறேன்  இணையம் இல்லையேல்  இவ்வகை  வாசிப்பு  ஏற்பட்டிருக்கவே  முடியாது

நீங்கள்   சரியான கல்வி முறை  இருந்திருந்தால்  நன்று  என  கூறினீர்கள் இள வயது  முதலே  இந்திய தத்துவங்களையும்  ஆதி சங்கரரின்  வாழ்க்கையும்  அத்வைதமும்  கற்க  எண்ணினேன்  ஆனால்  இவ்வகை  கல்வியை  தத்துவ கல்வி  என கொள்ளாமல்  மத போதனைகளாக  மட்டுமே  நான் வளர்ந்த  சூழலில் பார்த்தனர்  தத்துவ க்கல்விக்கு  பெரும் மதிப்பு அளிக்காத தாகவே  நம் சமூகம்  இருப்பதாக  எண்ணுகிறேன்  வளர்ந்த நாடுகளில்  இன்றளவும்  கிரேக்க தத்துவங்களை பயிலவும்  கிரேக்க  லத்தின் மொழிகளை  கற்கவும்  ஆர்வம்  இருக்கிறது  அவ்வகையில்  இங்கு சமஸ்க்ருதமும்  தமிழும் கற்கப்படும்  எனில் இங்கு தத்துவக் கல்வியும்  சாத்தியப்படும்  என  நினைக்கிறேன்

அங்குள்ள அமைவரும் socrates plato nietzsche இவர்களை ஏதோ ஒரு வகையிலாவது அறிந்திருக்கின்றனர் என்னுடன் பயிலும் சகா மாணவர்களுக்கு இவ்வகையிலான அறிதல் இருக்குமா என்றே நினைக்கையில் இல்லை என அறிகையில் கோவமும் ஆற்றாமையும் சேர்ந்த என்னை சூழ்கிறது என் நண்பனடகிய ஒரு பிராம்மணன் தினமும் சமஸ்க்ரித மந்திரங்களை சொல்லி சந்தியாவந்தனம் செய்கிறவன் அவனுக்கு கூட அத்வைதத்தை பற்றிய சிறு புரிதல் கூட இல்லை அத்வைதம் என்ற வார்த்தைக்கே அவன் அர்த்தம் தெரியவில்லை என்றான். இதன் மூலமாக ஜாதி மதத்திற்கும் அப்பால் அறியாமை வளர்ந்து கொண்டிருக்கிறது என்றே கூற முற்படுகிறேன் மதத்தை கடந்து தத்துவமாகஇச்சிந்தனைகள் கற்க படும் காலம் வருமா என ஏக்கம் கொள்கிறேன்

இவ்வகையில் கல்வி மாறுபடும் வரை என் போன்ற மாணவர்கள் பிழைப்புக்காகவும் குடும்பத்திற்காகவும் மருத்துவமும் பொறியியலும் நல்ல சம்பளம் தரும் மற்ற வேலைகளை தரும் படிப்புகளில் மட்டுமே சேர முடியும் என்பதில் கவலை கொள்கிறேன்

இன்று  உங்கள் தலத்தில்  வந்த  மெல்லிய  நூல்  சிறுகதை  என் பின் தொடரும் நிரலில் குரல் வாசிப்பை மீளச் செய்தது  நாவலை  முடிக்கும் போது  என்  அகச்சமநிலை  தலைகீழாய்  ஆனது  அதில் இருந்து  வெளி வர எனக்கு பல நாட்களும்  pg wodehouse  புத்தகங்களும்  தேவைப் பட்டன  அந்நாவல்  செய்ததை வெண்முரசின் ஒவ்வொரு அத்தியாயமும்  எனக்குச் செய்கிறது  எனக்  கூறினால் அது மிகை ஆகாது  மேலும் பல தலைகீழ்களை எ திர்நோக்கியிருக்கும்

ஸ்ரீராம்

முந்தைய கட்டுரைவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 33
அடுத்த கட்டுரைஎரிமருள் வேங்கை